உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

131

மதங்கொண்ட யானையையும் அடக்கவல்ல கோவலன், மதுரையில் கொலையுண்டபோது, அவன் கையில் உடைவாள் இருந்திருக்குமானால், அவன் வெட்டுண்டு மடிந்திருக்க மாட்டான். அப்படி மடிந்திருந்தாலும் தற்காப்புக்காகப் போர் செய்து பிறகு மடிந்திருப்பான். கோவலன் ஆயுதம் இல்லாமல் அயர்ந்திருக்கும் நிலையில் கொலைசெய்யப்பட்டான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இதற்கு நேர்மாறாகப் பத்தினிச் செய்யுள், கையில் கட்டாரி ஏந்திப்போர் செய்து இறந்து கிடக்கிற வீரனைக் கூறுகிறது. எனவே, இச்செய்யுளில் கூறப்படுகிறவன் கோவலன் அல்லன் என்பதும், அவன் வேறு யாரோ போர் வீரன் என்பதும ஐயம் இல்லாமல் தெளிவாகத்தெரிகிறது. வ்வளவு தெளிவான அகச்சான்று இருக்க, இதனைச் சிறிதும் கருதாமல், பல்கலைக் கழகத்து மூன்று அறிஞர்களும், இச்செய்யுளில் கூறப்பட்டவன் கோவலன் என்று கூறுகிறார்கள். இவர்கள் கருத்தை அறிவுடையோர் ஏற்றுக்கொள்வரோ?

“கெண்டிக் கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள் அழுதகண் ணீர்துடைத்த கை

என்னும் இச்செய்யுளின் பின் இரண்டடிகளும், கண்ணகியைப்பற்றி எதையுங் கூறவில்லை, வேறு யாரோ ஒரு பெண்ணின் செய்தியைத் தான் கூறுகிறது. கற்புள் ஒரு பெண்மணியின் ஊடற் செய்தி இதில் கூறப் படுகிறது; அவளுடைய வாழ்க்கையிலே தன் கணவனுடன் பல நாட்கள் ஊ ல் கூடல்கள் நிகழ்ந்ததைக் கூறுகிறாள். இச்செய்யுளில். இந்த ஊடல் கூடல்களைக் கண்ணகி கோவலனுடன் இணைத்துக் கூறுவது பொருந்தாது. கண்ணகிக்கும் கோவலனுக்கும் ஊடல் கூடல்கள் நிகழ்ந்ததாகச் சிலப்பதிகாரம் கூறவில்லை. அதற்கு மாறாக, மாதவிக்கும் கோவலனுக்கும் பலமுறை ஊடல் கூடல்கள் நிகழ்ந்ததைச் சிலப்பதி காரம் கூறுகிறது. கண்ணகியுங் கோவலனும் மதுரைக்குச் சென்ற பிறகுங் கூட அவர்களுக்குள் ஊடலும் கூடலும் நிகழவில்லை. அவர்களுக்கு அங்கு ஊடல் கூடல்களுக்கு வாய்ப்பும் ஏற்படவில்லை. எனவே, இச் செய்யுளின் பின் இரண்டடிகளும் கண்ணகியைப் பற்றியதல்ல; வேறு யாரோ ஒரு பத்தினிப்பெண்ணைப் பற்றிய செய்தியாகக் காணப்படுகிறது.

எனவே, இந்தப் பத்தினிச்செய்யுள், கோவலன் கண்ணகியரைப் பற்றியதல்ல, வேறு யாரோ ஒரு வீரனையும் அவன் மனைவியையும் பற்றிய செய்யுள் என்பது ஐயமில்லாமல் விளங்குகிறது. ஆனால்,