உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. உண்மைப் பொருள்*

சிலப்பதிகாரக் காவியத்திலே, அக்காவியத் தலைவியாகிய கண்ணகியார், ஒரு முலை குறைத்த திருமா பத்தினி' என்று கூறப் பாடுகிறார். நற்றிணை என்னும் சங்கத்தொகை நூலிலே 216 ஆம் செய்யுளிலே, திருமாவுண்ணி என்னும் பெண்மணி, தன்னுடைய ஒரு கொங்கையை அறுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறார். அப்பெண் மணியை, ‘ஒரு முலை அறுத்த ‘திருமாவுண்ணி' என்று கூறுகிறார் அச் செய்யுளாசிரியர். இவ்வாறு கொங்கை குறைத்தாகக் கூறப்படுவது கி.பி. 300-க்கு முற்பட்ட சங்க காலத்து நூல்களில் ஆகும். கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலே இருந்தவரும், வைணவ ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவரும், பெரியாழ்வாரின் மகளாரும் ஆகிய ஆண்டாள் (நாச்சியார்) என்னும் பெண்மணியாரும் முலையறுப்பது பற்றித் தம் பாசுரங்களில் கூறுகிறார்.

உலகத்திலே பெண்மகள் ஒருத்தி தாங்க முடியாத மனவருத்தம் அடைந்தால் – வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டால் அவள் என்ன செய்கிறாள்? தன்னுடைய உயிரை மாயத்துக்கொள்கிறாள். தற்கொலை செய்துகொண்டு உயிர் துறக்கிறாள். நீரில் மூழ்கியோ, எண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்டோ, தூக்கிட்டுக் கொண்டோ தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இதுதான் உலகம் முழுவதும் எக்காலத்திலும் எந் நாட்டிலும் நிகழ்கிற நிகழ்ச்சி. ஆனால், எந்தப் பெண்ணும் தன் கொங்கையை அறுத்துக்கொண்டதாக இதுவரையில் நாம் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை.

66

66

ஆனால், தமிழ்நாட்டின் தலைசிறந்த காவியமாகிய சிலப்பதிகாரம், ஒரு முலை இழந்தாளோர்

திருமா பத்தினி

(பதிகம் : 5)

'முத்தார மார்பில் முலைமுகந் திருகி

நிலைகிளர் கூடல் நீளெரி யூட்டிய

பலர் புகழ் பத்தினி

99

  • கலைக்கதிர். 11. 10, 1959.