உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

66

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

முலை குறைத்தாள் முன்னரே வந்தாள்

மதுராபதி என்னும் மாது”

(அழற்படுகாதை)

'ஒருமுலை குறைத்த திருமாபத்தினி" (நீர்ப்படை 129)

66

'கலிகெழு கூடல் கதழெரிமண்ட

முலைமுகந் திருகிய மூவா மேனிப்

பத்தினி.

99

(வரந்தரு காதை)

என்று, கண்ணகியார் தமது நகிலை அறுத்துக் கொண்டதாகத் தெளிவாகக் கூறுகிறது.

மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர் திருமாவுண்ணி என்னும் பெண் மணி தனது ஒரு நகிலை அறுத்துக்கொண்டதாக ஒரு செய்யுளில் கூறுகிறார். நற்றிணையில் இடம் பெற்றுள்ள அப்பாடலில்

66

"எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்

குருகார் கழனி இதணத் தாங்கண்

ஏதிலாளன் கவலை கவற்ற

ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி

என்று அவர் கூறுகிறார்.

(நற்றிணை 216)

அப்படியானால், இளங்கேவடிகளும், மதுரை மருதன் இள நாகனாரும் “முலை குறைத்தல்” என்று கூறியது பொய்யா, வெறும் கற்பனையா, கட்டுக் கதையா என்னும் கேள்வி எழுகிறது. இப் புலவர்கள் கூறியது பொய்யும்அன்று, கற்பனையும் அன்று, கட்டுக் கதையும் அன்று. முலை குறைத்தல் என்னும் சொல்லுக்கு, உண்மை யாகவே கொங்கையை அறுத்துக்கொள்வது என்பது பொருள் அல்ல. இச்சொல் வேறு மறை பொருளுடைய குறிப்புச் சொல். முற்காலத்தில் வழங்கப்பட்டு பிற்காலத்தில் வழக்கு இழந்து போன சொற்களில் இதுவும் ஒன்று. அந்த மறை பொருள் என்ன? இக் கேள்விக்கு விடை காண்போம். ஆண்டாள் பாசுரத்தில் இக் கேள்விக்கு விடை காணலாம்.

பெரியாழ்வார் என்னும் வைணவ பக்தரின் மகளார் ஆண்டாள் எனப்படும் நாச்சியார். ஆண்டாள், சிறு வயது முதல் கண்ணனையே மணம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். மங்கையாக வளர்ந்து மணப்பருவம் அடைந்தபோதும் இவருக்குக் கண்ணனையே (திரு மாலை) மணம் செய்யவேண்டும் என்னும் ஆசை அதிகப்பட்டது.