உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

என்றலும் இறைஞ்சியஞ்சி

இணைவளைக்கை எதிர்கூப்பி

நின்றவெல்லையுள் வானவரும்

நெடுமாரி மலர்பொழிந்து

163

குன்றவரும் கண்டுநிற்பக்

கொழுநனொடு கொண்டுபோயினார்'

(குன்றக்குரவை, உரைப்பாட்டு மடை)

காவியத்துக்கும் நாடகத்துக்கும் வியப்புச் சுவையூட்டுவதற்கு இளங்கோ அடிகள் கற்பித்த இந்தக் கற்பனையைச் சரித்திரக்காரர் உண்மை நிகழ்ச்சி என்று கொள்ளமாட்டார். கண்ணகியார் குன்றின்மேல் வேங்கை மரத்தின்கீழே உயிர் நீத்தார் என்பதை மட்டும் இயற்கையான உண்மை நிகழ்ச்சி என்று கொள்வார்கள். இது நிற்க.

கண்ணகியார் உயிர்விட்ட இடம் எது என்பதை ஆராய்வதற்கு இந்தக் கட்டுரையைத் தொடங்கினோம். அதனைத் தொடர்வோம். மாறுபட்ட கருத்துகள்

கண்ணகியார் நெடுவேள்குன்றம் அடிவைத் தேறிப், பூத்த வேங்கைப் பொங்கர்க்கீழ்' உயிர் விட்டார் என்று இளங்கோ அடிகள் கூறுகிறார். அந்த நெடுவேள் குன்றம் எது என்பதை அறிய வேண்டும். நெடுவேள் குன்றம் எது என்பது பற்றிப் பழைய உரையாசிரியர்கள் மாறுபட்டு வெவ்வேறு இடங்களை கூறுகிறார்கள். சிலப்பதிகாரத்தின் பழைய உரையாசிரியர் (அரும்பத உரையாசிரியர்) நெடுவேள் குன்றம் என்பது திருச்செங்கோடு மலை என்றும், அவருக்குப் பிற்காலத்தவ ரான அடியார்க்கு நல்லார் (சேர நாட்டு மேற்குக் கடற்கரை ஓரமாக உள்ள) கொடுங்கோளூர்க்குப் பக்கத்திலுள் செங்குன்றுமலை என்றும் கூறுகிறார்கள். நெடுவேள் குன்றம் (கட்டுரை கா,ை 190) என்பதற்குப் பழைய அரும்பத உரையாசிரியர், நெடுவேள் குன்று - திருச்செங் கோடு என்று உரை எழுதியுள்ார். அஃதாவது கொங்கு நாட்டில் ஈரோட்டுக்கு அடுத்துள்ள திருச்செங்கோடு மலையைக் கூறுகிறார்.

அவருக்குப் பின்னவரான அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரப் பதிகத்தின் மூன்றாவது வரியான, குன்றக்குறவர் ஒருங்குடன் கூடி என்பதற்கு உரை எழுதுகிறவர். குன்றம் கொடுங்கோளூர்க்கு அயலதாகிய செங்குன்றென்னு மலை என்றுஎழுதுகிறார். எழுதிய