உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

195

எதிர் காலத்திலே ஒரு புத்தர் இனிப் பிறக்கப்போகிறார் என்று பௌத்தர்களுக்குள் ஒரு நம்பிக்கை உண்டு. நமது பாரத நாட்டிலே ன்னொரு புத்தர் பிறந்து அறவுரைகளைப் போதித்து பௌத்த மதத்தை நிலைநாட்டப்போகிறார் என்பது நமது நாட்டுப் பௌத்தர் களின் கொள்கை. இதுபோலவே, மகாவீரர் எதிர்காலத்திலே இவ் வுலகத்திலே பிறந்து ஜைன (சமண) மதத்தை நிலைநாட்டப்போகிறார் என்பது சமண சமயக்கொள்கை. இந்தக் கொள்கையைத்தான் கூல வாணிகன் சாத்தனார் தமது மணிமேகலையிற் கூறினார். சாத்தனார் இவ் விடத்திற் கூறியது, பிறந்து வாழ்ந்துமறைந்துபோன கௌதம புத்தரை அல்ல. அவர் கூறியது இனிவரப்போகிற புத்தரை. இனி வரப்போகிற புத்தரை அநாக புத்தர் (பிறக்காத புத்தர்) என்று பௌத்தர்கள் கூறு வார்கள். இனி, எதிர்காலத்திலே ஒரு புத்தர் தோன்றி தர்மோபதேசம் செய்யும்போது கண்ணகியும் கோவலனும் மாசாத்துவானும் அவ்வுபதேசங்களைக் கேட்டு முத்தியடைவார்கள் என்று சாத்தனார் கூறியதில் என்ன முரண்பாடு இருக்கிறது?

ஆராயவேண்டிய முறைப்படி ஆராய்ச்சி செய்யாமல், தவறான வழியிற் சென்று ஆராய்ந்தபடியால் இவர்களின் முடிவு தவறான முடிவாயிற்று. தங்களுடைய தவற்றினை உணராமல் சாத்தனார்மேல் அறியாமைக் குற்றத்தைச் சுமத்தி, முன்னுக்குப்பின் முரணாகக் கூறினார் என்று பழி கூறியதோடு மட்டும் நில்லாமல், கோவலன், கண்ணகி, சாத்தனார், இளங்கோவடிகள், செங்குட்டுவன் ஆகிய இவர்கள் எல்லோரும் உண்மையில் இருந்தவர்கள் அல்லர், கற்பனையாகக் கட்டிவிடப்பட்ட கற்பனைப் புருஷர்கள் என்றும் இந்த ஆராய்ச்சி யாளர்கள் எழுதிவிட்டார்கள். முதற் கோணல் முற்றுங்கோணல்.

இவர்கள் மேற்கோள் காட்டிய மணிமேகலைப் பகுதிக்கு இவர்கள் தவறாகப் பொருள் செய்ததுதான் முதற் கோணல், பௌத்த சம்பிரதாயத்தை அறியாத காரணத்தினாலே, எதிர்காலப் புத்தரை இறந்த காலப் புத்தராக (கௌதம புத்தராக)க் கருதிக் கொண்டது. இவர்கள் ஆராய்ச்சியில் முதற் பிழையாகும். பௌத்த சம்பிரதாயப்படி இதற்குப் பொருள் கூறுகிறவர்கள், இனி தோன்றப்போகிற புத்தர் என்று பொருள்கூறுவார்களே தவிர, மறைந்துபோன கௌதம புத்தர் என்று பொருள்கொள்ளமாட்டார்கள்; பொருள்கொள்ளக் கூடாது. அப்படிப் பொருள்கொள்வது தவறு. எனவே, சாத்தனார் கருதிய பொருளுக்கு