உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

மாறாகப் பொருள் கொண்டபடியினாலே, பிள்ளையும் திரு. சாஸ்திரி யும் தமதுஆராய்ச்சியில் தவறு செய்துவிட்டார்கள். அந்தத் தவறு காரணமாக அவர்களின் ஆராய்ச்சி முடிவும் தவறான முடிவாய் விட்டது. இவர்களின் தவறான முடிவை அறிஞர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

-

பௌத்த மதக்கோட்பாடுகளை நன்கறிந்தவர்கள் சாத்தனாரின் மணிமேகலைக் காவியத்திலே சரித்திர முரண்பாட்டைக் காண மாட்டார்கள். “முன்பின் மலையா மங்கல மொழி” என்று சாத்தனாரே கூறுகிறபடி, முன்னுக்குப்பின் முரண்பட்ட செய்தியோ, மாறுபட்ட கருத்துக்களோ சாத்தனாரின் மணிமேகலையிற் காணப்படவில்லை. புத்தர் சரித்திரத்துக்கு மாறுபட்ட வரலாற்றையும் சாத்தனார் கூற வில்லை. ஆராய்ந்து பார்க்கவேண்டிய முறைப்படி, ஆராய்ந்து பார்க்காமல், தவறான முறையில் ஆராய்ந்த படியினாலே பிள்ளை யவர்களும் சாஸ்திரியவர்களும் தவறான முடிவுக்கு வந்தார்கள். புத்தர் என்னும் சொல்லுக்குக் கௌதம புத்தர் என்று தவறான பொருள் கொண்ட படியினாலே அவர்கள் தமது ஆராய்ச்சியில் பிழையான முடிவைக் கண்டார்கள். அது பெரும் பிழையான முடிபு. அவர்களைப் போல மேற்போக்காக ஆராய்கிறவர்களுக்கு அவர்கள் ஆராய்ச்சி முடிபு உண்மை போலக் காணப்பட்டாலும், அவை தவறான முடிபுகளே; தள்ளத்தக்க முடிபுகளே; கொள்ளத்தக்கவை அல்ல.

சாத்தனார் மணிமேகலையில் முன்னுக்குப்பின் முரணாகக் கூறவில்லை; முரண்படாமல் சரியாகவே கூறியுள்ளார் என்பது நன்கு விளக்கப்பட்டபடியால், பிள்ளையவர்கள் கொண்ட முடிபு தவறாகிறது. தம்முடைய பிழையுள்ள தவறான முடிபை வைத்துக்கொண்டு, இளங்கோ அடிகளும் சாத்தனாரும் பிற்பட்ட காலத்தவர் என்று அவர் கூறியது ஏற்கத்தக்கதல்ல. கண்ணகியும் கோவலனும் சரித்திரத் தொடர்புடைய ஆட்கள் அல்லர் என்று அவர் எழுதியதும் தவறாகிறது. எனவே, அவரது கருத்து தள்ளப்படவேண்டியதாகும். இதனால், கோவலனும் கண்ணகியும் சரித்திரத் தொடர்புடைய ஆட்கள் என்பதும் அவர்கள் உண்மையில் உலகத்திலே வாழ்ந்திருந்தனர்கள் என்பதும் தெளிவாக விளங்குகிறது.

சாத்தனார் சரித்திரத்துக்கு மாறாகக் கூறவில்லை. வரலாற்றுக்கு ஏற்றபடியே கூறியுள்ளார் என்பது விளக்கப்பட்டபடியால், நீலகண்ட