உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

நாடிலும் நின்னடியே நாடுவன் நாள்தோறும்

பாடடிலும் நின்புகழே பாடுவன்- சூடிலும்

பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு என்னாகி லென்னே எனக்கு.

பிடிசேர் களிறளித்த பேராளா! உன்தன்

13

அடிசேர்ந் தருள்பெற்றா என்றே - பொடிசேர்

அனற்கங்கை யேற்றான் அவிரிசடைமேல் பாய்ந்த

புனற்கங்கை யென்னும்பேர்ப் பொன்.

14

பொன்திகழு மேனிப் புரிசடையம்புண்ணியனும்

நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும்

இருவரங்கத் தால்திரிவ தேலும் ஒருவன்

ஒருவனங்கத் தெஎன்று முளன்.

15

கீழ்க்கண்ட செய்யுட்கள் பூதத்தாழ்வார் இயற்றிய இயற்பா இரண்டாந் திருவந்தாதியிலிருந்து எடுத்தவை:-

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இனபுருகு சிந்தை இடுதிரியா

நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்.

1

மற்றா ரியலாவார்? வானவர்கோன் மாமலரோன் சுற்றும் வணங்கும் தொழிலானை - ஒற்றைப் பிறையிருந்த செஞ்சடையான் பின்சென்று மாலைக் குறையிரந்து தான்முடித்தான் கொண்டு.

2

சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன் - அறந்தாங்கும் மாதவனே! என்னும் மனம்படைத்து மற்றவன்பேர் ஓதுவதே நாவினால் உள்ளு.

-

ஒருருவ னல்லை ஒளியுருவம் நின்னுருவம் ஈருருவ மென்பர் இருநிலத்தோர் ஒருருவம் ஆதியாம் வண்ணம் அறிந்தா ரவர்கண்டீர் நீதியால் மண்காப்பார் நின்று.

3

4