உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மூன்றாமடி

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

பதப்பொருள் : விண்தலர் தேவர்கள், பொழில் கற்பகப் பூஞ்சோலை, அணிவு சூடுதல், ஏணு எண்ணும், புரத்தரன் தேவேந்திரன்.

பொழிப்பு : தேவர்கள் கற்பகப் பூஞ்சோலை மலர்களால் அர்ச்சிக்கப்படுகின்ற தேவேந்திரனுடைய. (எணு எனற்பாலது, ஏணு என நீண்டது. புரந்தரன் எனற்பாலது, புரத்தரனென வலித்து நின்றது.)

நான்காமடி

வேணு

பதப்பொருள் : விண்டு - இதழ்கள் விண்டு, அலர் - மலர்கின்ற, பொழில் அணி சோலை சூழ்ந்த, வேணுபுரத்து அரன் புரமென்று மொரு பெயருள்ள சீகாழிப் பதிக்குக் கர்த்தா.

பொழிப்பு : இதழ்கள் விண்டு மலர்கின்ற சோலை சூழ்ந்த சீகாழிப் பதிக்குக் கர்த்தாவாயுள்ளவன். (தேவேந்திரன் மூங்கில் வழியாக வந்து பூசித்ததால் வேணுபுரமென்னும் பெயர் பெற்றது.)

சிலம்பினைத் தரித்துள்ளவரும், முப்புரத்தை யெரித்தவரும், தேவேந்திரனுடைய சோலை சூழ்ந்த வேணுபுரத்தில் வீற்றிருக்கும் இறைவரெனக் கூட்டி யுரைத்துக் கொள்க.

புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே

முதலடி

புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே

புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே

புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே

3

பதப்பொருள் : புண்டரிகத்தவன் - இதய கமலத்திலுள்ளவன், மேவிய புகலியே எனக்கின்பந் தருவானுமாய் மீளா வழியாகிய புகலிடமாயுமுள்ளவன்.

பொழிப்பு : இதய கமலத்திலிருந் திடையறாத வானந்தம் பொழியப்பட்டென்னை மலபோதத்தில் தள்ளாமல் எனக் கடைக்கலப் பொருளாயுள்ளவன்.