உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

நான்காமடி

289

பதப்பொருள்: தசமுகன் பத்துத் தலைகளையுடைய இராவணன், நெரிதர முறிய, ஊன்று - அமுக்கிய, சண்பையான்

சண்பை என்னும் திருப்பதியில் வீற்றிருப்பவன்.

பொழிப்பு: பத்துத் தலையுள்ள இராவணன் முறியும்படி திரு விரலாலடர்த்தவன் யாரென்னில், சண்பையென்னுந் திருப்பதியிலே வீற்றிருக்குங் கடவுள்.

காழி யானய னுள்ளவா காண்பரே

காழி யானய னுள்ளவா காண்பரே

காழி யானய னுள்ளவா காண்பரே காழி யானய னுள்ளவா காண்பரே

10

முதலடி

பதப்பொருள்: காழியான நிலைபெற்று நின்மலமான சித்தத்தையுடைய பத்தரிடத்து, உள்ளவா- சத்தியம், காண்பரே . நோக்குவர்.

பொழிப்பு : நிலைபெற்று நின்ற நின்மலமாகிய சித்தத்தை யுடைய பத்தரிடத்துச் சத்தியப்பொருள் விளையும் பொருட்டு ஞான நாட்டத்தினாலே அவர்களைக் கடாக்ஷிக்கின்றவன்.

இரண்டாமடி

பதப்பொருள் : காழியான் - களங்கமுள்ளவன், நயனுள்ளவா ஞானக் கண்ணுள்ளவாறு, காண்பரே - நிலைமையாக நினைப்பரே. பொழிப்பு : திருமிடற்றிற் களங்கமுடையானது கருணையை நினைத்து ஞான நாட்டத்தையுடைய சிவஞானிகள் சிவனுக்கிச்சை தன்னடியார்க்கே ஆங்காரத்தைத் தடுக்குதே பணியெனத்

தமதறிவிலே கருதாநிற்பர்.

மூன்றாமடி

-

பதப்பொருள் : காழியான் - விஷ்ணு, அயன் - பிர்மா, உள்ள நினைக்க, ஆ - அதிசயம, கண் - கருதுதல், பரே - அன்னியம்.

-

பொழிப்பு : விஷ்ணுவும் பிர்மாவுந் திருமுடியுந் திருவடியுங் காணும்பொருட்டு, வராகமு மன்னமுமாகக் கருதி வடிவு கொண்டார்