உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

அந்தாதி எனப்படும். அதாவது, முதற் செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாவது அசையாவது சீராவது அடுத்த செய்யுளின் முதற் சொல்லாக அமையப்பாடுவது. கடைசிச் செய்யுளின் முதற் சொல்லாக அமையப்பாடுவது. கடைசிச் செய்யுளின் ஈற்றுச் சொல் முதற் செய்யுளின் தொடக்கமாகவும் அமையவேண்டும். பொன் வண்ணம் என்று தொடங்குகிற இந்நூல், செய்யுள்தோறும் அந்தாதியாக அமைந்து ஈற்றுச் செய்யுளின் இறுதிச் சொல் பொன்வண்ணமே என்று முடிந்து, அந்தாதியின் இலக்கணத்தைக் கொண்டிருக்கிறது.

கிறது.

இந்த அந்தாதி, பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டிருக்

திருவாரூர் மும்மணிக் கோவை

இந்நூலை இயற்றியவரும் கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாள் நாயனாரே. இக்கோவையைத் திருவாரூர் திருக்கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் முன்னிலையில் அரங்கேற்றினார் என்று பெரிய புராணம் கூறுகிறது.

“தேவர் முனிவர் வந்திறைஞ்சுந்

தெய்வப் பெருமாள்கழல் வணங்கி

மூவர் தமக்கு முதலாகு

மவரைத் திருமும்மணிக் கோவை

நாவ லூரர் தம்முன்பு

நன்மை விளங்கக் கேட்பித்தார்

தாவில் பெருமைச் சேரலனார்,

தம்பி ரானார் தாங்கொண்டார்

9914

"

மும்மணிக் கோவை என்பது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் செய்யுட்கள் விரவி வகைக்குப் பத்துச் செய்யுளாக முப்பது செய்யுட்களால் அமைக்கப்படும் நூல். இந்த இலக்கணப்படியே இக் கோவையும் அமைந்திருக்கிறது.

இந்நூலும், பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

ஆதி உலா

தி உலாவுக்குக் கயிலாய ஞான உலா என்னும் பெயரும் உண்டு. இதை இயற்றியவரும் கழறிற்றறிவாராகிய சேரமான்