உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

307

பொருமாள் நாயனாரே. தமிழில் உள்ள உலா நூல்களிலே இதுவே முதன் முதலாக ஏற்பட்டது என்பதை இதற்கு உள்ள ஆதி உலா என்னும் பெயரினாலேயே அறியலாம்.

இந்த உலாவைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது. சேர மான்பெருமாள் நாயனார் இந்த உலாவைப் பாடி, சுந்தரமூர்த்தி நாயனாரோடு திருக்கயிலாயம் சென்று அங்கேஅரங்கேற்றினாராம். பிறகு, திருக்கயிலாயத்திலிருந்து இவ்வுலாவை மாசாத்தர் என்பவர் தமிழ்நாட்டிலுள்ள திருப்பிடவூரில் கொண்டுவந்து வெளியிட்டாராம். இதைப் பெரிய புராணம் கூறுகிறது.

"பெருகுவேதமும் முனிவரும் துதிப்பரும் பெருமையாய்! உனை அன்பால் திருஉலாப்புறம் பாடினேன் திருச்செவி சாத்திடப் பெற வேண்டும்

மருவு பாசத்தை அகற்றிட வன்றொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன அருளும்ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார்”

"சேரர்காவலர் விண்ணப்பஞ் செய்த அத் திருவுலாப்புறம் அன்று

சாரல்வெள்ளியங் கயிலையில் கேட்டமா

சாத்தனார் தரித்திந்தப்

பாரில்வேதியர் திருப்பிடவூர் தனில்

வெளிப்படப் பகர்ந்தெங்கும் நகரவேலைசூழ் உலகினில் விளங்கிட

நாட்டினர் நலத்தாலே”15

திருமறைக்காட்டந்தாதி

இந்த அந்தாதியைப் பாடியவர் சேரமான்பெருமாள் நாயனார். சேரமான்பெருமாள், சுந்தரமூர்த்தி நாயனாருடன் தல யாத்திரை செய்துகொண்டு திருமறைக்காட்டுக்குச் சென்றபோது இவ்வந்தாதியைப் பாடினார் என்று பெரிய புராணம் கூறுகிறது.