உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

அடிகேளுமக் காட்செய வஞ்சுதுமென்

றமரர் பெருமானை யாரூர னஞ்சி

முடியா லுலகாண்ட மூவேந்தர் முன்னே

மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும்""

எனவே, தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்த வரகுண பாண்டியன் காலத்திலே மாணிக்கவாசர் இருந்தார் என்பதும், அக் காலத்திலேயே சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இருந்தார் என்பதும் தெரிகின்றன.

மாணிக்கவாசகர், சிவபக்தனான வரகுண்பாண்டியனைத் திருக் கோவையாரில் கூறியது போலவே, அவருக்குப் பிற்காலத்தவரான பட்டினத்துப்பிள்ளையாரும், வரகுண பாண்டியனின் பக்திச் செயல்களைத் தமது திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில் கூறுகிறார். அவை :

1. நீறு பூசிய கள்ளனை விடுதலை செய்தது. 2. நரிகளுக்கு ஆடை அளித்தது. 3. தவளைகளுக்குக் காசு அளித்தது. 4. எச்சில் எள்ளை உண்டது. 5. மருதூரில் கிடந்த தலையோட்ப்ை போற்றியது. 6. கோயிலில் நாய்க்கட்டம் எடுத்தது. 7. வேம்புகளுக்கு விதானம் அளித்தது. 8. தேவியைச் சிவபெருமானுக்குப் பணி விடை செய்ய அளித்தது என்பன.

2

பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் (பழைய திருவிளையாடற் புராணத்தில்), வரகுணபாண்டியனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடலில், மேற்படி எட்டுச் செயல்களையும் வரகுணபாண்டியன் பக்தியினால் செய்தான் என்று கூறுப்படுகிறது.3

ஆனால், புதிய திருவிளையாடற் புராணமாகிய பரஞ்சோதி முனிவர் தீருவிளையாடற் புராணத்தில் அந்த எட்டு பக்திச் செயல்களும் கூறப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன.

மாணிக்கவாசகர் கூறுகிற வரகுணபாண்டியனும், பட்டினத்துப் பிள்ளையார் கூறுகிற வரகுணபாண்டியனும், பெரும்பற்றப்புலியூர்

1.

திருக்கோத்திட்டையும் திக்கோவலூரும் 11.

2. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, செய்யுள் 28அடி 34-35.

3.

வரகுணனுக்கு சி.கா. படலம் 23-29.