உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

தேரார் வீதித் தென்னாகைத்

திருக்கா ரோணத் திறையானைச்

சீரார் மாடத் திருநாவ

லுர்க்கோன் சிறந்த வன்றொண்ட

னாராவன் போடுரைசெய்த

அஞ்சோடஞ்சு மறிவார்கள்

வாரார் முலையா ளுமை கணவன்

மதிக்கவிருப்பார் வானகத்தே.

மாணிக்க வாசகர் காலம்

359

11

மாணிக்கவாசகர் காலத்தைப் பலபேர் ஆராய்ந்து பலவித கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். கி. பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரையில் உள்ள காலத்தை அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகப் பெருமான் வாழ்ந்திருந்தார் என்பதை இப்போது பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்கிறார்கள். எமது ஆராய்ச்சியில் கண்ட முடிபும் அதுவே. அதாவது, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலே, பாண்டிய நாட்டை வரகுண பாண்டியனும், பல்லவ இராச்சியத்தைத் தெள்ளாறெறிந்த நந்திவர்மனும் அரசாண்ட காலத்திலே, சுந்ரமூர்த்திநாயனாரும் சேரமான் பெருமாற் நாயனாரும் வாழ்ந்திருந்த காலத்திலேயே, மாணிக்கவாசகரும் உயிர் வாழ்ந்திருந்தார் என்பது எமது ஆராய்ச்சியிற் கண்ட முடிபு. இதனைச் சான்று காட்டி விளக்குவோம்.

மாணிக்கவாசக சுவாமிகள், தாம் அருளிய திருக்கோவையாரில், இரண்டு இடங்களில் வரகுண பாண்டியனைக் குறிப்பிடுகிறார். அவையாவன:-

“மன்னவன் தெம்முனைமேல் செல்லுமாயினும் மாலரியேறு அன்னவன்தேர் புறத்தல்கல் செல்லாது வரகுணனாம்

தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றைத் தேவர்க்கெல்லாம் முன்னவன் மூலவன் நாளும் மற்றோர் தெய்வம் உன்னலனே

"புயல் ஓங்கலர் சடை ஏற்றவன் சிற்றம்பலம் புகழும்

அய லோங்கிருங் களியானை வரகுணன் வெற்பின் வைத்த கயலோங் கிருஞ்சிலை கொண்டு மன் கோபமுங் காட்டிவரும்

செயலோங் கெயிலேரி செய்த பினின்றோர் திருமுகமே'

1. திருக்கோவையார் 306, 327.