உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

397

கட்டளைக் கலித்துறை

திருத்தேர் புகழ்நந்தி தேசபண்டாரி

தெள்ளாறை வெற்பில்

மருத்தேர் குழலிக்குக் கார்முந்து

மாகின் மகுடரத்னப்

பரித்தேரும் பாகுமங் கென்பட்டவோ

வென்று பங்கயக்கை

நெரித்தே வயிற்றில்வைத் தேநிற்பளே

வஞ்சி நெஞ்சுலர்ந்தே.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சிவனை முழுது மறவாத சிந்தையான் செயமு னுறவு தவிராத நந்தியூர்

குவளை மலரின் மதுவாரும் வண்டுகாள்! குமிழி சுழியில் விளையாடு தும்பியே! அவனி மழைபெய் குளிர்காலம் வந்ததே யவரு மவதி சொனநாளும் வந்ததே

கவலைபெரிது பழிகாரர் வந்திலார்

கணவருறவு கதையாய் முடிந்ததே.

2

3

கட்டளைக் கலித்துறை

வாரூரு மென்முலை வார்த்தைகண் டூரு மதிமுகத்தில் வேரூரு மேனி வியன்றளி ரூரும் விசயனுக்குத் தேரூரு மானந்தி தேசபண் டாரிளெள் தாறைவெற்பில் காரூர் குழலிக்குக் காதள வூருங் கடைக்கண்களே.

கோக்கருநந்தடக்கன்'

4

கோக்கருநந்தடக்கன் என்னும் அரசன், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலும், வரகுணபாண்டியன் மகனான ஸ்ரீமாறன் காலத்திலும் இருந்தவன். இவன், சேர நாட்டின் தென்பகுதியை (திருவாங்கூர் நாட்டை) அரசாண்டான். பாண்டியன் ஸ்ரீமாறன், திருவாங் கூரை வென்றபடியினாலே, கோக்கருநந்தடக்கன் பாண்டியயனுக்குக்

1. இதை 183 – ஆம் பக்கத்தில் உள்ள சாசனங்களுக்குப் பின்னால் சேர்த்து வாசிக்கவும்.