உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

429

இலங்கையை அரசாண்ட பத்துத்தலை இராவணனைப் போரில் வென்ற இராமன் அயோத்தியில் சென்று அரசாட்சி செய்து கொண் டிருந்தான். அப்போது விலங்கையை அரசாண்ட நூறுதலை இராவணன் பத்துத் தலை இராவணன் இறந்துபோனதை அறிந்து அவனைக் கொன்ற இராமன் மேல் ஆத்திரங் கொண்டான். ஆகவே நூறுதலை இராவணன் இராமன்மேல் போர் தொடுத்தான். இராமனும் போருக்குத் தயாரானான் முதலில் சத்ருக்கினனையும் பிறகும் இலக்குமணனையும் பிறகு பரதனையும் ஒருவருக்குப் பின் ஒருவராகப் போருக்கு அனுப்பினான். இவர்கள் எல்லோரையும் விலங்கை இராவணன் கொன்று போட்டான். கடைசியாக இராமன் அனுமானைப் போருக்கு அனுப்பியபோது அவனை விலங்கை இராவணன் தூக்கி ஆயிரம் மைலுக்கப்பால் வீசியெறிந்துவிட்டான். கடைசியில் ..... போர் செய்ய முடியாமற் போகவே, சீதை இராமனுக்கு உதவியாக வந்து ஒரு தெய்வ பெண் உருக்கொண்டு நூறுமுக இராவணன் எதிரில் நின்றாள். அவள் எழிலைக் கண்டு மயங்கியவிலங்கை இராவணன் ஆண்மை வலி மையையும் இழந்து நின்றான். அப்பொழுது இராமன் அவனைக் கொன்றான். இதுதான் விலங்கை இராமாயணக் கதை.

கம்பராமாயணம் தமிழ்நாட்டில் எப்படி போற்றப்படுகிறதோ அவ்வாறே சரளதாசரின் பாரத இராமாயணங்கள் ஒரியாநாட்டில் போற்றப்படுகின்றன. தமிழருக்குக் கம்பனும் ஒரிசா நாட்டுக்குச் சரளதாசரும் தலை சிறந்த புலவர்கள். இருவருடைய வாழ்க்கையும் ஒரே வாழ்க்கை போன்று அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரியா பாஷையில் சூன்ய சம்ஹிதை என்னும் ஒரு நூலை வீரசிம்மன் என்னும் புலவர் எழுதியிருக்கிறார். வீரசிம்மன் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழராகிய வீரசிம்மன் ஒரியா நாட்டில் குடியேறி ஒரியா மொழியைக்கற்று அந்த பாஷையில் ஒரு நூல் எழுதினார் என்பது தமிழருக்குப் பெருமை தருவதல்லவா?

கடைசியாக, தமிழ் எழுத்தாளருக்கு ஒரு வார்த்தை. தமிழ் எழுத்தாளர் ஏனைய இரண்டு மூன்று மொழிகளையும் படித்திருப்பது நல்லது. ஒரியா பாஷை வங்காளி பாஷை தெலுங்கு, கன்னடம் முதலிய பாஷைகளில் ஒன்றையேனும் படித்திருக்க வேண்டும். புதிய பாரத நாட்டில் ஒரு பாஷையை மட்டும் கற்றவருக்கு இனி சிறப்பில்லை என்பதை அறியவேண்டும். ஆனால் தாய்மொழியை முதலில் நன்றாக