உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

அறிந்தபிறகு வேறு மொழியைக் கற்கவேண்டும். தாய்மொழியை நன்றாக படிக்குமுன்னமே வேறு மொழியைக் கற்கப் புகுவது குளிக்கப்போய் சேறு பூசிக்கொண்ட கதை போலாகும். தமிழ் எழுத்தாளர்கள் வெறும் கிணற்றுத் தவளைபோல இராமல் வேறு பாஷைகளில் ஒன்றிரண்டை அவசியம் படிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கூற விரும்புகிறேன்.