உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

445

சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர்முன் யான் மொழிந்த பருப்பொருள் தானும் விழுப்பொருளாம் பனிமாலி....... பொருப்பகம் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாம் இருக்குமென் றிவ்வா நுரைக்கு மன்றோ இவ்விரு நிலமே

தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீர் அருவிக் கானார் மலயத் தருந்தவன் சொன்ன கன்னித் தமிழ்நூல் யானாந டாத்துகின்றே னென்றெனக்கே நகைதருமால் ஆனா அறிவினவர்கட்கு என்னாங்கொல் என் ஆதரவே. புத்தமித்திரனார்:

வீரசோழிய இலக்கண நூலை இயற்றிய புத்தமித்திரனார் கூறும் அவையடக்கத்தைப் பாருங்கள்.

ஆயுங் குணத்துஅவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு ஏயும் புவனிக்கு இயம்பிய தண்தமிழ் ஈங்குரைக்க நீயும் உளையோ எனில், கருடன்சென்ற நீள்விசும்பில் ஈயும் றக்கும் இதற்கென்கொலோசொல்லும் ஏந்திழையே.

கண்டிங்கு நாளும் கடல்வையம் காதல் செய்யும் வெண்திங்கள் தானும் விமலம் தனக்கில்ல தன்றே

கொண்டென் சொலெல்லாம் குணனேனயெனக் கூறுகென்னேன் உண்டிங்கோர் குற்றம் எனில்யானும் ஒட்டாமை யுண்டோ

புகழேந்திப்புலவர்

வெண்பா பாடுவதில் புகழ்பெற்ற புகழேந்திப் புலவர் தாம் இயற்றிய நளவெண்பா என்னும் நூலுக்கு அவையடக்கம் கூறுவது காண்க.

வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின்

தந்துவினால் கட்டச் சமைவதொக்கும் பைந்தொடையில் தேன்பாடும் தார்நளன்தன் தெய்வத் திருக்தையை

யான்பாட லுற்ற இது.

(வேழம் = யானை. வேரி = வாசனை. தந்து = நூல்)

6