உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

37

10. பொன் வெள்ளி முதலியவற்றைத் தொடாதிருத்தல் ஆகிய இவை இரண்டும் சேர்ந்து தசசீலம் (பத்து ஒழுக்கம்) எனப்படும். தசசீலம் துறவிகள் ஒழுகவேண்டிய ஒழுக்கமாகும். தசசீலத்தில் ஒழுகும் துறவி, சிற்றின்பத்தை அறவே ஒழிக்கவேண்டும். தசசீலங்களை மேற்கொண்டு, அடக்கமான பேச்சையும் அடக்கமான செயலையும் உடையவராய், உலகப் பற்றுக்களை நீக்கித் துறவறத்தை மேற்கொண்டவரே பிக்கு ஆவார். பிறகு,

சமாதி (தியானம்) என்பது, துறவறம் மேற்கொண்டு தசசீலங்களில் ஒழுகுகிற துறவியானவர், கைக்கொள்ள வேண்டிய ஒழுக்கம். விலக்க வேண்டிய தீய எண்ணங்களை நீக்கி, மனத்தை ஒரு நிலையில் நிறுத் துவதே சமாதி அல்லது தியானம் என்பது. இதனால், ஐம்புலன்களினால் உண்டாகும் ஆசைகளும்; பகை, கோபம், மறதி, ஐயம், அடக்கமின்மை முதலிய தீய குணங்களும் தடுக்கப்படுகின்றன; மனம் சாந்தநிலையை யடைகிறது. பிறகு,

பஞ்ஞா என்னும் ஞானநிலையில் ஒழுகவேண்டும். தியான மாகிய சமாதியொழுக்கத்தினாலே, தீய எண்ணங்களும் மனோ வுணர்ச்சிகளும் அழிக்கப்படாமல், செயலற்று அடங்கிக் கிடக் கின்றன. அவை, திடீரென எழும்பிவிடவும் கூடும். அவ்வாறு, அவை எழும்பிச் செயற்படாதவாறு, பஞ்ஞா அல்லது ஞானம் என்னும் நுண்ணறிவைக் கொண்டு அவற்றை அழிக்க வேண்டும். இந்த ஞானந்தான், பொருள் களை உள்ளது உள்ளவாறு உணரச் செய்து, மனோவுணர்ச்சிகளை அழியச் செய்கிறது. இந்த ஞான நிலையை யடைந்தவர் உலகத்தின் உண்மையான நிலையைக் காண்கிறார். அதனால்,

66

'அநித்தம் துக்கம் அநான்மா அசுசி எனத் தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்

-

மணி, 30; 254-255

என்றபடி உலகம் நிலையாமையுள்ளது. துன்பம் உடையது, அநாத் மிகமானது, அசுத்தமானது என்றுணர்ந்து பற்றற்று வீடடைகின்றார்.

பௌத்தமதத் தத்துவம் ஒருவாறு சுருக்கமாகக் கூறப்பட்டது. இது, தேரவாத பெளத்த தத்துவமாகும்.