உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

காரிதே கணதாஸேன் ஸ்ணவாசேன ஸாதுனா விஹாரே விவிதாகார சாரு பாகார கோபுரே

பூதமங்கலம்:

57

இதுவும் சோழநாட்டில் இருந்த பௌத்த ஊர்களில் ஒன்று; இவ்வூரில் வேணுதாசர் என்பவர் கட்டிய பௌத்த விகாரையில் ஆசாரிய புத்ததத்ததேரர் தங்கியிருந்த போது விநயவிநிச்சயம் என்னும் நூலைப் பாலிமொழியில் இயற்றினார். இந்த ஆசாரிய புத்த தத்ததேரர் சோழ நாட்டுத் தமிழர். தம் நூல்களில் சோழ நாட்டையும் காவிரிப் பூம்பட்டினத் தையும் சிறப்பித்துக் கூறியதுபோன்று, இந்தப் பூதமங்கலம் என்னும் ஊரையும் சிறப்பாகக் கூறியுள்ளார்:

சோழநாட்டிற்குக் கொப்பூழ் (நாபி) போன்றிருந்த பூதமங் கலம் வாழை, தென்னை, பனைமரங்கள் அடர்ந்த சோலை களாலும், அல்லி, ஆம்பல் முதலிய நீர்ப்பூக்களால் நிரம்பப்பெற்ற குளங்களாலும் சூழப்பெற்றதென்றும், செழிப்பும் செல்வமும் பெருகிய இடம் என்றும், காவிரியாற்றின் நீர் பாயப்பெற்ற சோலைகளையுடையதென்றும் அங்கு, அகழியால் சூழப்பெற்ற நெடுஞ்சுவர்களையுடைய வேணுதாசர் என்பவரால் அமைக்கப்

பட்ட

விகாரையில்

தங்கியிருந்தபோது தாம் விநயவிநிச்சயம் என்னும் எழுதியதாகவும் அழகுபடக் கூறுகிறார்:

66

"ஸெட்டஸ்ஸ சோளரட்டஸ்ஸ நாபிபூதே நிராகுலே ஸப்பஸ்ஸ பன லோகஸ்ஸ காமே ஸம்பிண்டிதே விய கதலீ ஸாலா தாலுச்சு நாளிகேர வனாகுலே

கமலுப்பல ஸஞ்சன்ன ஸலிலாஸ்ய ஸோபிதே காவேரி ஜலஸம்பாத பரிபூத மஹீதலே

இத்தே ஸப்பங்க ஸம்பன்னே மங்கலே பூதமங்கலே பவராகார பாகார பரிஃகா பரிவாரிதே

விஹாரே வேணுதாஸஸ்ஸ தஸ்ஸனீய மனோரமே

என்று அவர் கூறியிருப்பது காண்க.

நூலை

ஆசாரிய புத்ததத்தர் கூறுகிற பூதமங்கலம் என்பது எந்த ஊர்? தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள பூதலூர் என்று சிலர் கருதுவர். இது தவறு. நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றத்து நகரம் வெண்ணி. இந்த