உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

வணிகர் இருந்த செய்தி அறியப் படுகிறது. திரு. அகத்தீஸ்வரம் உடைய நாயனார் என்பது அகத்தி அல்லது அகஸ்தி என்னும் பௌத்த முனிவரைக் குறிக்கிறது போலும். 20

கூவம்:

செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ளது. இவ்வூருக்குத் திருவிற் கோலம் என்றும் பெயர் உண்டு. இவ்வூரில் பண்டைக் காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள். இவ்வூரில் இருந்த பெரிய புத்தர்சிலை, ப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் கொண்டுவந்து வைக்கப் பட்டிருக்கிறது. இவ்வூரில் இன்றும் சில பௌத்த உருவச் சிலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தர்மச் சக்கரம். அதைப் படத்தில் காண்க. ஞாயர்:

செங்கற்பட்டு ஜில்லா புழற்கோட்டத்து ஞாயர் நாட்டு ஞாயர் என்று சாசனங்களில் இவ்வூர் கூறப்படும். இவ்வூரில் புத்தேரில் உடையார் கோயில் என்னும் பௌத்தக் கோயில் ஒன்று இருந்தது. நாவலூர்:

செங்கற்பட்டு ஜில்லா, பொன்னேரி தாலுகாவில் உள்ள ஊர். (இப்போது திருவள்ளூர் மாவட்டம்) பௌத்தக் காஞ்சியில் (காஞ்சி புரத்தில்) இருந்த கச்சிக்கு நாயகர் கோயில் என்னும் புத்த கோயிலின் பள்ளிச்சந்தம் (மானியம்) ஆக இருந்தது இவ்வூர் என்று இங்குள்ள ஒரு சாசனம் கூறுகிறது. இச் சாசனத் தின் பின்புறத்தில் தர்மசக்கரம் (பௌத்த சின்னம்) பொறிக்கப் பட்டுள்ளது.21

திருச்சோபுரம்:

தென் ஆர்க்காடு ஜில்லா, கூடலூர் தாலுகாவில் உள்ள இவ்வூர் மங்களபுரீசுவரர் கோயில் முன்மண்டபத்து மேல்தளத்தில் உள்ள ஒரு கல் சாசனம் சிதையுண்டிருக்கிறது. இச்சாசனத்தில் சாரிபுத்திரபண்டிதர் என்பவர் தானம் செய்த செய்தி கூறப்படுகிறதோடு சங்கத்தார் குறிப்பிடப் படுகின்றனர். சங்கம் பௌத்த பிக்குச் சங்கத்தைக் குறிக்கிறது. சாரிபுத்திர பண்டிதர் என்னும் பெயர் பௌத்தப் பெயர் ஆகும். ஆனால், இந்தச் சாரி புத்திரரும், திருஞானசம்பந்தருடன் வாதம் செய்த சாரிபுத்தர் வெவ்வேறு ஆட்கள். இந்தச் சாசனம், ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் I காலத்தில் கி.பி. 1264-65இல் எழுதப்பட்டது. 22