உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

கோயில் உண்டு. இக்கோயிலிலிருந்து தெற்குப் பக்கமாகக் கீழே இறங்கும் பாதை வழியாகச் சென்றால் மலையின் மத்தியில் ஒரு குகை காணப்படுகிறது. இக்குகையின் முன்புறம் இப்போது சுவர் வைத்து அடைக்கப்பட்டிருக்கிறது. சிறு வழியே உள்புகுந்து சென்றால், குகைக்குள் 5 கற்படுக்கைகளைக் காணலாம். பிராமி எழுத்துச் சாசனங்களும் உள்ளன. 31

விருச்சியூர்:

மதுரை ஜில்லா விளக்கத்தூருக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது. இவ்வூர்க் குன்றுகள் ஒன்றில் இரண்டு குகைகள் உள்ளன. மற்றொரு நீண்ட பாறையில் இயற்கையாயமைந்த குகையொன்றுண்டு. இங்குக் கற்படுக்கைகள் பல அமைக்கப்பட்டுள்ளன. பாறையில் 30 அடி உயரத்தில் பிராமி எழுத்துக்களும் காணப் படுகின்றன. 32

குன்னக்குடி:

மதுரை ஜில்லா திருப்பத்தூர் தாலுகா. இங்குள்ள குன்றின்மேல் சுப்பிரமணியர் கோயிலும், மேற்குப் பக்கத்தில் பஞ்சபாண்டவர் குகையும் உள்ளன. குகையில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் உள்ளன. 33

ஆனைமலை:

மதுரை ஜில்லா. இம்மலைமேல் பஞ்சபாண்ட வர் குகையும் கற் படுக்கைகளும் உள்ளன. பிராமி எழுத்துக்களும் எழுதப்பட்டுள்ளன.34

கி.பி. 7ஆம் நூற்றாண்டிலே திருஞானசம்பந்தர் காலத்தில் இம் மலையில் சமணர் இருந்தார்கள் என்று தேவாரத்தினால் அறிகிறோம். வீரசிகாமணி:

திருநெல்வேலி ஜில்லா சங்கரநயினார் கோயிலுக்கு 8 மைலுக் கப்பால் உள்ளது. இவ்வூர்ப்பாறையில் பஞ்ச பாண்டவர் குகையுண்டு. கற்படுக்கைகள் உள்ளன. 35

மருகால்தலை:

திருநெல்வேலி ஜில்லா பாளையங் கோட்டைக்கு 10 மைல் தூரத்தில் உள்ளது. இவ்வூரில் உள்ள பூவில் உடையார் மலையில்