உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

107

அடிக்குறிப்புகள்

1. சமஸ்கிருத மொழி என்று கூறினால், இருக்கு, யசுர், சாமம், அதர் வணம் என்னும் ஆரிய வேதங்கள் எழுதப்பட்டதும், ஆரியர்கள் பேசியதுமான பழைய மொழி என்று ஒரு தவறான எண்ணம் கற்றவர்கள் இடத்திலும் நிலவிவருகிறது. இது தவறு. ஆரிய வர்த்தம் எனப்படும் பஞ்சாப் சிந்து நதிக்கரைகளில் குடியேறிய ஆரியர் பேசிய மொழி சம்ஸ்கிருதம் அன்று. வேதகாலத்து ஆரியர் பேசிய ஆரிய மொழி இறந்து அழிந்து ஒழிந்து போயிற்று. பழைய ஆரியம் அழிந் தொழிந்த பிறகு, சம்ஸ்கிருதம் எனப்படும் வடமொழி மெல்லமெல்ல உருவடையத் தொடங்கிற்று. பிறகு ஏறத்தாழ கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலே சம்ஸ்கிருதம் உருவடைந்தது. சம்ஸ்கிருதத்திலே, பழைய ஆரியச் சொற்களும், தொன்றுதொட்டு இந்தியாவில் வழங்கிவந்த பிராகிருத மொழிச் சொற்களும், திராவிட மொழிச் சொற்களும் கலந்துள்ளன. இவ்வாறு புதிதாக அமைக்கப் பட்ட சம்ஸ்கிருதத்துக்குப் புதிதாக இலக்கணமும் அமைக்கப் பட்டது. சம்ஸ்கிருதம் என்னும் பெயரே, இது புதிதாகத் தோன்றிய மொழி என்பதை வலியுறுத்துகிறது. (சமம் + கிருதம் = சம்ஸ்கிருதம் = நன்றாக, செம்மையாக (perfect ed of improved) செய்யப்பட்டது என்பது பொருள்.) பிராகிருதம் என்பதற்கு அடிப்படையானது, அநாதியாக உள்ளது என்பது பொருள். சம்ஸ்கிருத மொழியிலே பல நூற்றுக் கணக்கான திராவிட மொழிச் சொற்களும் கலந்திருப்பதைக் கற்றறிந்த அறிஞர் காட்டியுள்ளார்கள். புதிதாக உண்டாக்கப்பட்ட சம்ஸ்கிருதத்தில் திராவிடச் சொற்கள் கலக்கப் பட்டதற்குக் காரணம் என்னவென்றால், அக்காலத்திலே, (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே) வட இந்தியாவில் திராவிட மொழிகள் வழங்கிவந்தன. திராவிடச் சொற்களும், பிராகிருதச் சொற்களும் பழைய ஆரியச் சொற்களும் சேர்ந்து புதிதாக அமைந்ததே சம்ஸ்கிருத பாஷை என்பதும், அதற்கும் பழைய ஆரிய பாஷைக்கும் மாறுபாடுகள் உண்டு என்பதும் அறியற்பாலன. பிராகிருத மொழிகள் முந்தியவை. சம்ஸ்கிருதம் பின்னால் உண்டானது. சம்ஸ்கிருதத்திலிருந்து பிராகிருத மொழிகள் உண்டாயின என்று சிலர் கருதுவது தவறு.

=