உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

இதனை அரசனுக்கு அறிவித்தனர். அரசன் உண்மை அறிந்து மணி மேகலையை நகரமக்கள் துன்புறுத்தா வண்ணம் காவலில் வைத்தான். இராசமாதேவி தன் மகன் இறந்தது மணிமேகலையினால் என்று கருதி, அவளுக்கு ஊறு செய்ய நினைத்து, அவளைக் காவலினின்று தன்னிடம் அழைத்துக்கொண்டு, அவளுக்குப் பற்பல துன்பங்களைச் செய்து பார்த்தாள்; ஒழுக்க வீனமுள்ளவள் என்று அலர் தூற்றவும் முயன்றாள். இவற்றிற்கெல்லாம் மணிமேகலை உட்படாமல் தன் நிலையைக் காத்துக்கொண்டாள். இவளது உண்மை நிலையை அறிந்த பின்னர், இராசமாதேவி தன் குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டு மணிமேகலையைச் சிறைவிட்டாள்.

பின்னர், மணிமேகலை, தான் அந்நகரில் இருந்தால் அரச குமாரன் இறப்பதற்குக் காரணமாயிருந்தவள் என்று ஊரார் குறை கூறுவராதலின், அந்நகரத்தில் இருக்க விரும்பாமல், அறவண அடிகள், மாதவி முதலியவர்களிடம் விடைபெற்றுச் சாவகநாடு (ஜாவாதீவு) சென்றாள். சின்னாள் சென்ற பின்னர், அங்கிருந்து சேரநாட்டின் தலைநகரமான வஞ்சிமாநகர் சென்று அங்கு வாழ்ந்திருந்த பற்பல சமயத்தவரையுங் கண்டு, அவ்வவர்களின் சமய உண்மைகளை அறிந்தாள். அவற்றால் ஒன்றும் மனம் தேறாமல், கடைசியாகக் காஞ்சி மாநகருக்குச் சென்று, அங்கு வந்திருந்த அறவண அடிகளிடம் பௌத்த தரும மெய்ப்பொருளைக் கேட்டு உணர்ந்து, நெடுநாள் நோற்றுக் கடைசியில் அவ்வூரிலேயே காலமானாள்.

மணிமேகலைக் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றதாகக் கூறப்படுகிறபடியால் அவள் உண்மையில் வாழ்ந்திருந்தவள் அல்லள், கற்பனையாகக் கற்பிக்கப் பட்டவள் என்று சில ஆராய்ச்சிக்காரர் மேலோட்டமாக ஆராய்ந்து கூறுகிறார்கள். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து மணிமேகலை மணி பல்லவத் தீவுக்கு (யாழ்ப்பாணத்துக்கு வடக்கே உள்ள தீவு) ஆகாய வழியே பறந்து போய்த் திரும்பி வந்தாள் என்றும், பிறகு கிழக்கே வெகு தூரத்திலிருக்கும் சாவக நாட்டுக்கு (கிழக்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஜாவாதீவு) ஆகாய வழியே பறந்துபோய் அங்கிருந்து ஆகாய வழியே பறந்து மணிபல்ல வத்துக்கு வந்தாள் என்றும் பின்னர் அங்கிருந்து ஆகாய வழியே பறந்து சேரநாட்டு வஞ்சி மாநகரத்துக்குப் போனாள் என்றும் மணிமேகலைக் காவியம் கூறுகிறது. ஆகவே மணிமேகலை உண்மையில் இருந்தவள் அல்லள் என்றும் அவள்