உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

143

ஒழுக்கங்களையும் ஆராய்வதற்கு இது பெரிதும் பயன் படுகிறது. இந்த மணிமேகலை நூல் தமிழ்த்தாய்க்கு அணிசெய்யும் மணிமேகலை யாகவே இலங்குகின்றது. இந்த நூல் இயற்றப்பட்ட காலம், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு; (இணைப்பிற் காண்க.)

சுவைமலிந்த இச்செந்தமிழ் நூலை முதன் முதல் அச்சிற் பதிப்பித்தவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை யவர்களாவர். 1894ஆம் ஆண்டுக்கு நேரான ‘விஜய தனுர் ரவியில் இப்புத்தகம் மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிக்கப் பட்டு, 12- அணாவுக்கு விற்கப்பட்டது. மகாவித்துவான் சண்முகம் பிள்ளை யவர்கள் தம்மிடமிருந்த ஏட்டுச் சுவடியை மட்டும் ஆராய்ந்து வெளியிட்ட நூலாதலின், இதில் சிற்சில பிழைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பிள்ளையவர்கள் பதிப்பு வெளிவந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் பல பிரதிகளை ஆராய்ந்து 1898ஆம் ஆண்டில் அரும்பத உரையுடன் இந்நூலை அச்சிற் பதிப்பித்தார்கள். ஐயரவர்களுக்கு உதவியாயிருந்த பல ஏட்டுப் பிரதிகளுள் மகா வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் உதவிய பிரதியும் ஒன்றாகும். பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலைப் புத்தகத்தையும் ஐயரவர்கள் பார்த்திருக்கக் கூடும். ஆனால், எக்காரணத் தினாலோ ஐயரவர்கள், பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலைப் பற்றிக் குறிப்பிடாமலேயிருந்து விட்டார்கள். பிள்ளையவர் களின் பதிப்பில் காணப்பட்ட பிழைகள் பலவும் ஐயரவர்களின் பதிப்பில் திருத்தப் பெற்றன. எஞ்சிநின்ற ஒரு சில பிழைகளும் இரண்டாவது, மூன்றாவது பதிப்புக்களில் திருத்தப் பெற்றன. இந்த அருமையான சிறந்த செந்தமிழ் நூல் இறந்துபடாமல் உய்வித்தருளிய இரண்டு பெரியாருக்கும் தமிழ்நாட்டின் நன்றி என்றும் உரியதாகுக.

இந்நூல் நடையினை அறியக் கீழே சில பகுதிகளை எடுத்துக் காட்டுவோம். புகார்ப்பட்டினத்தின் உவவனம் என்னும் பூஞ் சோலையைக் கூறும் பகுதி இது:-

‘குரவமு மரவமுங் குருந்துங் கொன்றையுந் திலகமும் வகுளமுஞ் செங்கால் வெட்சியும் நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும்

பிடவமுந் தளவமு முடமுட் டாழையுங்