உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

'அருணெறியாற் பாரமிதை யாமைந்து முடனடக்கிப்

பொருண் முழுதும் போதியின்கீழ் முழுதுணர்ந்த முனிவரன்றன் அருண்மொழியா னல்வாய்மை யறிந்தவரே பிறப்பறுப்பார் மருணெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ.'

155

'மருடரு மனம் வாய் மெய்யிற் கொலைமுதல் வினைப் பத்தாமே என்பது சித்தாந்தத் தொகை' என்று நீலகேசி, புத்த வாதச் சருக்கம் 64ஆம் பாட்டுரையில் கூறப்பட்டிருக்கின்றது. இவற்றைத் தவிர இந்நூற் செய்யுள்கள் வேறொன்றும் கிடைக்க வில்லை.

5. திருப்பதிகம்

இதுவும் இறந்துபட்ட நூலுள் ஒன்று. இந்நூல் ஆசிரியர் யாவர், இந்நூல் எத்தனைப் பாக்களைக் கொண்டது என்னும் செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. காலமும் தெரியவில்லை. இந்நூலின் பெயரைக் கொண்டு இது புத்தர்மீது இயற்றப்பட்ட தோத்திரநூல் என்று கருத இடமுண்டாகிறது. சிவஞான சித்தியார் (பரபக்கம் சௌத்திராந் திகன் மதம், 2 ஆம் செய்யுள், ஷ மறுதலை, 8ஆம் செய்யுள்) உரையில் ஞானப்பிரகாசர் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள் காட்டி, ‘இது திருப்பதிகம் எனக் கொள்க’ என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

'எண்ணிகந்த காலங்க ளெம்பொருட்டான் மிகவுழன்று எண்ணிகந்த காலங்க ளிருடீர வொருங்குணர்ந்தும் எண்ணிகந்த தானமுஞ் சீலமு மிவையாக்கி

எண்ணிகந்த குணத்தினா னெம்பெருமா னல்லனோ’

நீலகேசி உரையாசிரியர் கடவுள் வாழ்த்து உரையில் மேலே காட்டிய செய்யுளையும், கீழ்க்கண்ட செய்யுளையும் மேற்கோள் காட்டி யுள்ளார். ஆனால், இச்செய்யுள்கள் இந்நூலிலிருந்து எடுக்கப்பட்டன என அவர் குறிப்பிடவில்லை. ஆயினும், அவர் காட்டிய கீழ்க்கண்ட செய்யுளும் இந்த நூலைச் சேர்ந்ததுதான் என்பதில் ஐயமில்லை.

'என்றுதா னுலகுய்யக் கோளெண்ணினா னதுமுதலாச் சென்றிரந்தார்க் கீந்தனன் பொருளுடம் புறுப்புக்க

டுன்றினன் பிறக்குந னுளனாயின் மாமேருக்

குன்றியின் றுணையாகக் கொடுத்திட்டா னல்லனோ.'