உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

வந்ததாகக் கொள்வதுதான் பொருத்தமுடையது. இச்சொற் களை மணிமேகலை, நீலகேசி முதலிய நூல்களில் காணலாம்.

தேரன், தேரி:

இவை பௌத்தத் துறவிகளில் மூத்தவர்களுக்கு வழங்கும் ண்பால் பெண்பாற் பெயர்கள். இச்சொற்கள் மணி மேகலை, நீலகேசி, தேவாரம் முதலிய நூல்களில் வந்து உள்ளன.

பிக்ஷ பிக்ஷணி:

(பிக்கு, பிக்குணி) முறையே பௌத்த ஆண், பெண் துறவிகளைக் குறிக்கின்றன. மணிமேகலை, நீலகேசி முதலிய நூல்களில் இச்சொற்கள் காணப்படுகின்றன.

விகாரை, விகாரம்:

பெயர்.

பௌத்தக் கோயிலுக்கும் பிக்ஷுக்கள் வாழும் இடத்துக்கும்

வேதி, வேதிகை:

திண்ணை என்பது பொருள். அரசு முதலான மரங்களின்கீழ் மக்கள் தங்குவதற்காகக் கட்டப்படும் மேடைக்கும் பெயர்.

போதி: அரசமரம்.

பாடசாலை: பள்ளிக்கூடம்.

விகாரை: பௌத்த பிக்குகள் வசிக்கும் கட்டிடம்.

வேணு, வெளு: மூங்கில்

சீலம்: ஒழுக்கம்

அர்ஹந்தர்: பௌத்த முனிவர்.

சீவரம்: பௌத்த பிக்குகள் உடுத்தும் ஆடை.

சேதியம்: கோவில்.

ததாகதர்: புத்தர்

தம்மம்: தர்மம்

நிர்வாணம்: பௌத்தருடைய வீடுபேறு.