உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

4.

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

கொள்கைகள் பரவுவதற்கு முன்னே மணிமேகலை இயற்றப் பட்டிருக்க வேண்டுமென்பதைக் காட்டுகின்றது. எனவே, மணிமேகலை நாகார்ஜுனருக்கு முன், அஃதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், இயற்றப்பட்டதாதல் வேண்டும். இதனைக் கீழ்க்கண்ட ஆங்கில நூல்களில் விளக்கமாகக் காணலாம்.2 2

சங்கச் செய்யுள்களில் பல்லவர்களைப் பற்றிக் கூறப்படவில்லை. அதிலும் சிறப்பாகத் தமிழ்நாட்டு வேந்தர்களை ஆங் காங்குக் குறிப்பிட்டுச் செல்கின்ற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பல்லவ அரசர்களைக் கூறவில்லை. பல்லவர்கள் காஞ்சீ புரத்தைத் தலைநகரமாகக் கொண்டு தமிழ்நாட்டின் வட பகுதியை அரசாண்ட பேர் பெற்ற மன்னர். இவர்களைப் பற்றிக் கூறப்படாதது பற்றி, பல்லவர் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னர் ‘மணிமேகலை' இயற்றப்பட்டிருக்க வேண்டும். காஞ்சீ புரத்தை அரசாண்டவன் சோழமன்னன் என்றும், அவன் ‘நலங் கிள்ளி' என்பவன் தம்பி 'இளங்கிள்ளி' என்பவன் என்றும் மணி மேகலை கூறுகின்றது. பல்லவர் முதல் முதல் காஞ்சீபுரத்தைக் கைப்பற்றியது கி.பி. நாளாம் நூற்றாண்டிலென்றும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் சோழர்கள் சோழநட்டிலும் தொண்டை நாட்டிலும் வலிமை பெற்றிருந்தார்களென்றும் ‘குமார விஷ்ணு அல்லது ‘ஸ்கந்தவர்மன்' என்னும் பெயருள்ள பல்லவ அரசன் தமிழ்நாட்டின் வடக்கிலிருந்து வந்து காஞ்சீபுரத்தை முதல் முதல் கைப்பற்றினானென்றும், அவன் காஞ்சியைக் கைப்பற்றியது ஏறத்தாழ கி.பி. 325 ஆம் ஆண்டென்றும் கூறுவர் ஹீராஸ் பாதிரியார்.3

பல்லவர் காஞ்சியைச் சோழரிடமிருந்து முதல் முதல் கைப்பற்றியது கி.பி. 325ஆம் ஆண்டில் ஆகையாலும், மணிமேகலையில் கூறப் பட்டுள்ள காஞ்சியை அரசாண்ட மன்னன் சோழர் குடும்பத்தைச் சேர்ந்தவனாகையாலும், மணிமேகலை இந்த ஆண்டுக்கு முன் இயற்றப்பட்டதாதல் வேண்டும். ஆனால், மேலே கூறப்பட்ட கஜபாகுவின் காலத்தையும் செங்குட்டுவன் காலத்தையும், நாகார்ஜுனர் காலத்தையும், கிருதகோடி உரை இயற்றிய 'போதாயனர்' என்பவரின் காலத்தையும் ஒப்பிட்டு நோக்கும்போது, மணிமேகலை கி.பி.