உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பௌத்த சமணத் தமிழிலக்கியங்கள்*

பௌத்த மதமும் சமண சமயமும் தமிழ் நாட்டிலே முற்காலத்தில் பெருஞ் சிறப்புப் பெற்றிருந்தன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரையில் இந்த மதங்கள் ஓங்கியிருந்து பிறகு சிறிது சிறிதாகச் சிறப்புக் குன்றிக் கடைசியில் கி.பி. 13-ம் நூற்றாண் டுக்குப் பிறகு வீழ்ச்சி யடைந்து விட்டன. ஏறத்தாழப் பதினைந்து நூற்றாண்டு காலம் தமிழகத்தில் ஓங்கியிருந்த இந்த மதங்களின் செல்வாக்கு தமிழ் இலக்கியத்திலும் ஊடுருவிச் சென்றது. பௌத்த- சமண சமயங்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் செய்த தொண்டுகள் மிகப் பல. அந்தத் தொண்டுகளைப் பற்றி இங்குச் சுருக்க மாக ஆராய்வோம். அவற்றை ஆராய்வதற்கு முன்பு, இந்த மதங்கள் தமிழ் நாட்டுக்கு வந்த வரலாற்றை ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டும்.

பௌத்த சமயத்துக்குக் சாக்கிய மதம் என்றும், சமண சமயத்துக்கு ஜைனமதம் அல்லது ஆருகத சமயம் என்றும் பெயர். சமண சமயம் மிகப் பழமையான சமயம். அச்சமயத்தின் கடைசி தீர்த்தங்களின் பெயர் வர்க்கமான மகாவீரர் என்பது. பௌத்த மதத்தை உண்டாக்கியவரின் பெயர் பௌதம புத்தர் என்பது. இவர்கள் இரண்டு பேரும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர்கள். இவ்விருவரும் சிலகாலம் ஒரே இடத்தில் வாழ்ந்து வந்தவர்கள். எனவே இருவரும் சம காலத்தவர்.

வர்த்தமான மகாவீரரின் சமண சமயத்தையும் கௌதம புத்தரின் பௌத்த மதத்தையும் அவர்கள் காலத்தில் அரசாண்ட அரசர்கள் ஆதரித்தார்கள். இராஜக்கிருக நகரத்தில் இருந்து அரசாண்ட பிம்பிசாரன் (கி.மு. 540-490) என்னும் அரசனும் அவன் மகனான அஜாத சத்துரு (கி.மு. 490-460) என்னும் அரசனும் பௌத்த ஜைன மதங்களை ஆதரித்தார்கள். சமண சமயத்தார் பிம்பிசார அரசனைச் சிரேணிகன் என்றும், அஜாத சத்துருவைக் குணிகன் என்றும் கூறுவர். பௌத்த மதத்தை ஆதரித்த பிம்பிசார அரசனைப் பற்றித் தமிழில் ஒரு சிறந்த காவிய நூலைத் தமிழ்ப் பௌத்தர் உண்டாக்கியிருந்தார்கள்.

தமிழ் வட்டம். முதலாண்டு மலர். 1967.