உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

அந்தக் காவியத்துக்கு விம்பசார காவியம் என்பது பெயர். அந்தக் காவியம் பிற்காலத்தில் மறைந்து விட்டது.

மௌரிய சக்கரவர்த்தியாகிய சந்திர குப்த மௌரியர் பத்திரபாகு முனிவரைத் தம் குருவாக ஏற்றுச் சமண சமயத்தில் சேர்ந்து தமது இறுதிக் காலத்தில் துறவு பூண்டு பத்திரபாகு முனிவருடன் சமண சமய முனிவர்களுடன் மைசூரில் உள்ள சிரவண பௌ கொள என்னும் இடத்துக்கு வந்து தங்கினார். தங்கியவர்கள் பிறகு பிரசாரகர்களைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பிச் சமண சமயத்தை பரப்பினார்கள். இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. சந்திர குப்த சக்கரவர்த்தியின் பேரனான அசோக சக்கரவர்த்தியின் காலத்தில் (கி.மு. 273-232) பௌத்த மதம் தமிழ் நாட்டுக்கு வந்து பரவியது. இவ்வாறு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பௌத்த சமண சமயங்கள் தமிழ் நாட்டுக்கு வந்து பரவி, காலப்போக்கில் செழித்து வளர்ந்து சிறப்புற்றிருந்தன. செழித்து வளர்ந்த இந்த மதங்கள் சமயத் துறையிலும் தம் ஆதிக்கத் தைச் செலுத்தியது போலவே மொழித் துறையிலும் ஆதிக்கம் செலுத்தின. பிறகு, இடைக் காலத்திலே கி.பி. 7, 8, 9-ஆம் நூற்றாண்டு களில் இருந்த பக்தி இயக்கக் காலத்தில் இந்த மதங்களின் செல்வாக்குக் குறைந்தது. பின்னர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்து மறைந்து போயின. மறைந்து போனபடியால் இந்த மதங்களின் சார்பான தமிழ் நூல்கள் போற்றுவார் இல்லாமல் மறைந்து போயின. சமண சமயத்தார் இக்காலத்திலும் சிறு தொகையினர் தமிழ் நாட்டில் இருக்கிறபடியால் சமண சமய நூல்கள் முழுவதும் மறைந்து போகாமல் சில இன்றும் உள்ளன. பௌத்த சமயம் தமிழ் நாட்டில் அடியோடு மறைந்து போன படியால் பௌத்த நூல்கள் எல்லாம் (ஒன்று இரண்டு நூலைத் தவிர) அடியோடு மறைந்து போயின.

இனி பௌத்த-சமண சமயங்கள் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகளைப் பற்றிக் கூறுவோம்.

பௌத்த சமண சமயங்கள் வட இந்தியாவிலே தோன்றின படியால், இந்த மதங்களின் சமய நூல்கள் பிராகிருத பாஷையில் எழுதப்பட்டிருந்தன. பௌத்தரின் மத நூல்கள் மாகதி என்னும் பாலி மொழியிலும்., சமணரின் சமய நூல்கள் அர்த்த மகாதி என்னும் சூரசேனி பாஷையிலும் எழுதப்பட்டிருந்தன. ஆனால், பௌத்த- சமணப் பிரசாரகர் தமிழ்நாட்டில் தங்கள் மதங்களைப் பிரசாரம் செய்த