இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இளைஞர் பக்கம்
53
3. அணிற்பிள்ளை
ஆட்டின் பெயர் : ஒருவன், ஒரு பெருஞ் சதுரத்தின் நடுவிலுள்ள குறுக்கை (சிலுவை) போன்ற கோட்டின்மேல் நின்றுகொண்டு, அணில்போல் முன்னும் பின்னும் இயங்கியாடும் ஆட்டு அணிற்பிள்ளை எனப்படும்.
அணிற்பிள்ளை அரங்கு
ஆடுவார் தொகை : இதை ஐவர் ஆடுவர்.
ஆடுகருவி : நாற்சதுரமாக வகுக்கப்பட்ட ஒரு பெருஞ் சதுரமும் நாற்கல்லும் இதை ஆடு கருவிக
களாம்.
ஆடிடம்: பொட்டலும், அகன்ற தெருவும் இதை ஆடு மிடமாம்.
ஆடுமுறை : நாற்சதுரமாக நாற்சதுரமாக வகுக்கப்பட்ட ஒரு பெருஞ் சதுரத்தின் ஒவ்வொரு சதுரத்திலும் ஒவ்வொருவனாக, நால்வர் நின்றுகொள்வர். பெருஞ் சதுரத்தின் நடுவில் நாற்கல் வைக்கப் படும். ஒருவன் ஒருவன் நடுவிலுள்ள குறுக்கை போன்ற கோட்டில்
ள