உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

களையும் தொடுத்துக் கொடுக்கவும் ஏவலாளர்கள் பலர் நியமிக்கப் பட்டனர். இசைப்பாட்டுப் பாடும் அழகிய மகளி ரும், குழல், யாழ், முழவு முதலிய இசைக் கருவிகளை வாசிக்கும் மகளிரும், நடனம் நாட்டியம் ஆடும் மங்கையரும் நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு சுத்தோதன அரசர் தமது குமாரன் இல்லற வாழ்க்கை யிலேயே நிலை கொள்ளும்படியான பலவற்றையும் செய்து கொடுத்தார். மேலும், கண்ணுங்கருத்துமாகக் குமாரனைக் கவனித்து வந்தார். அசித முனிவரும் கொண்டஞ்ஞ நிமித்திகரும், சித்தார்த்த குமாரன் துறவு பூண்டு புத்தராவார் என்று கூறிய மொழிகள் சுத்தோதன அரசரின் மனத்தில் பதிந்திருந்தன. ஆகவே, தமது குமாரன் துறவு பூணாமல் இல்லறத் திலேயே இருக்கச் செய்யத் தம்மாலான முயற்சிகளையெல்லாம் செய்தார்.

சித்தார்த்தர் திருமணம்

சித்தார்த்த குமாரனுக்குத் திருமண வயது வந்ததையறிந்த சுத்தோதன அரசர், அவருக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணினார். அமைச்சர்களை அழைத்துத் தமது கருத்தைக் கூறினார். இக்கருத்தை யறிந்த சாக்கிய குலத்தவர் எல்லோரும் தமது குமாரத்திகளை மணஞ் செய்து கொடுப்பதாகக் கூறினார்கள்.

சுத்தோதன அரசர் தமக்குள் இவ்வாறு எண்ணினார்: “குமார னுடன் கலந்து யோசிக்காமல் நானாகவே மணமகளை ஏற்படுத்தினால் ஒருவேளை குமாரனுக்குப் பிடிக்காமல் இருக்கக்கூடும். குமாரனே யாரையேனும் தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொன்னால், ஒருவேளை மணம் வேண்டாம் என்று மறுத்துக் கூறவும் கூடும். என் செய்வது! நாட்டிலுள்ள மங்கையர் எல்லோரையும் அரண்மனைக்கு வரச் செய்து, அவர்களில் யாரிடம் குமாரனுக்கு ஆசை பிறக்கிறது என்பதை உபாயமாக அறிந்துகொள்ள வேண்டும்" என்று தமக்குள் சிந்தித்தார்.

பிறகு வெள்ளியினாலும் பொன்னாலும் பலவிதமாக நகைகளை யும் அணிகலன்களையும் ஏராளமாகச் செய்வித்து, “இன்று ஏழாம் நாள் சித்தார்த்த குமரன் மங்கையருக்குப் பரிசளிக்கப் போகிறார். பரிசு களைப் பெற்றுக் கொள்ள மங்கையர் எல்லோரும் அரண்மனைக்கு வர வேண்டும்" என்று பறை யறைவித்தார்

ஆறு நாட்கள் கழிந்தன. பரிசளிக்கப்படும் ஏழாம் நாள் வந்தது. சித்தார்த்த குமரன் வந்து அரண்மனையின் மண்டபத்திலே உயரிய