உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9

6

கொள்ளாமல் பட்டினி நோன்பு நோற்பேன்” என்று தமக்குள் தீர்மானம் செய்துகொண்டார். இவருடைய எண்ணத்தை யறிந்த தேவர்கள் இவரிடம் வந்து, “போதிசத்துவரே! தாங்கள் உணவு கொள்ளாமல் உண்ணாநோன்பு நோற்பீரானால், தங்கள் உடம்பிலுள்ள மயிர்க் கால்கள் வழியாக உணவுச் சத்தினைத் தங்களுடைய உடம்பில் செலுத்துவோம்" என்று கூறினார்கள்.

இதைக்கேட்ட கௌதமர், “நான் உணவு கொள்வதை அடியோடு நிறுத்திவிட்டால், இவர்கள் மயிர்க் கால்களின் வழியாக ஆகாரத்தை

உடம்பில் செலுத்துவார்கள். அதனால் நான் உணவை உட்கொண்டவன் ஆவேன். இவர்கள் அவ்விதம் செய்யாதபடி நானே சிறிதளவு உணவை உட்கொள்வது நலம்” என்று தமக்குள் கருதினார். இவ்வாறு கருதின கௌதம முனிவர் கொள்ளு, கடலை, பயறு முதலியவற்றை வேக வைத்து நீரை மட்டும் உட்கொள்வது நல்லது என்று கருதி அதன்படியே பயறுகளை வேகவைத்த நீரை மட்டும் சிறிதளவு உட்கொண்டார்.

உடல் வற்றிப்போதல்

இவ்வாறு அற்ப உணவாகிய பயற்றுநீரை மட்டும் உட்கொண்டு வேறு எவ்வித உணவையும் உண்ணாதபடியினாலே, நாளடைவில் கௌதம முனிவருடைய உடம்பு இளைத்துவிட்டது. அவருடைய புட்டங்களில் சதை சுருங்கிக் குழிவிழுந்தன. முதுகெலும்பு முடிச்சு போடப்பட்ட கயிறுபோலத் தெரிந்தது. விலா எலும்புகள், எண்ணக் கூடியபடி, வெளியே தெரிந்தன. நெற்றியிலும் முகத்திலும் உள்ள தோல், வெயிலில் காய்ந்த கத்தரிக்காயின் தோல் போலச் சுருங்கிவிட்டது. வயிறு ஒட்டிப் போயிற்று. கண்கள் குழிவிழுந்து விட்டன, உட்காரும் போதும் தலைகுனிந்தது. கையினால் தலையைத் தடவினால் தலை மயிர் உதிர்ந்தது. உடம்பைத் தடவினால் உடம்பில் உள்ள மயிர்கள் உதிர்ந்தன. இந்த நிறம் என்று தெரிந்து கொள்ள முடியாதபடி உடம்பின் நிறம் மாறிவிட்டது. உடம்பு கருநிறமா நீலநிறமா மண்நிறமா என்று சொல்ல முடியாதபடி நிறம் மாறிப் போயிற்று. இவருடைய உண்ணா நோன்பு இவரை இவ்வாறு செய்து விட்டது. உடம்பில் இவ்வளவு துன்பம் ஏற்பட்ட போதிலும் இவருடைய மன உறுதி மட்டும் மாறவில்லை

9