உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

மயங்கி விழுதல்

-

/67

உண்ணா நோன்பினாலே உடல் வற்றிப்போன கௌதம முனிவர் ஒரு சமயம் மலம் கழிக்க உட்கார்ந்தார். வயிறுவற்றிக் குடல் ஒட்டிப் போனபடியினாலே மலத்துவாரம் அடைபட்டு அதில் அதிக வலி உண்டாயிற்று. அந்த வலி பொறுக்கமுடியாமல் கௌதம முனிவர் மயக்க மடைந்து கீழே விழுந்துவிட்டார். இந்த நிலையில் இவரைக்கண்ட ஓர் ஆள் இவர் இறந்துவிட்டார் என்று கருதி, இவருடைய தந்தையான சுத்தோதன அரசனிடம் சென்று, “உமது மகன் இறந்துவிட்டார்” என்று கூறினான். அரசன், “புத்த ஞானம் பெற்ற பிறகு இறந்தாரா, பெறாத முன்பு இறந்தாரா?" என்றுகேட்டார். “புத்த ஞானம் பெறுவதற்கு முன்பே இறந்துவிட்டார்” என்று அவன் கூறினான். “போ, போ, என் மகன் புத்த ஞானம் பெறுவதற்கு முன்பு இறக்கமாட்டார்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

மயக்கமடைந்து கீழே விழுந்த கௌதம முனிவர் நெடுநேரஞ் சென்று மயக்கந் தெளிந்து எழுந்து தமது ஆசிரமம் சென்றார். இந்த நிலையிலும் கௌதம முனிவர் மீண்டும் அப்பிரணத் தியானம் செய்யத் தொடங்கினார். மூக்கையும் வாயையும் மூடி மூச்சையடக்கினார். அப்போது மூச்சு காதின் வழியாக வெளிப்பட்டது. காதுகளையும் கைகளினாலே அடைத்துக் கொண்டார். அதனால் சுவாசம் தலையை முட்டிற்று. தலையில் வலி உண்டாயிற்று. மூச்சு தலைக்கு மேலே போக முடியாமல் கீழிறங்கி வயிற்றைத் துளைத்தது. அப்போது, கூரிய கத்தி கொண்டு வயிற்றைக் குத்துவது போன்று பெருத்தவலி உண்டாயிற்று. இவ்வாறு கௌதம முனிவர் அடிக்கடி அப்பிரணத்தியானத்தைச் செய்து கொண்டிருந்தார். இதனால் கடுமையான வலியும் துன்பமும் இவர் உடம்பில் ஏற்பட்டன. ஆனாலும் விடாமல் உறுதியோடு செய்துவந்தார். ஆனால், இவருடைய மனம் ஒரு நிலைப்பட்டு உறுதியாக இருந்தது. இவ்வாறு உடம்பை அடக்கிக் கட்டுப்படுத்திய படியினாலே இவருடைய மனமும் கட்டுக்கடங்கி நன்னிலையில் உறுதியாக இருந்தது.

மாரன் உபதேசம்

நிர்வாண மோக்ஷம் என்னும் வீடுபேற்றினை அடைவதற்காக உடம்பையும் உயிரையும் பொருட்படுத்தாமல் அப்பிரணத் தியானத்தை