உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

-

109

அவர்கள் மும்மணியைச் சரணம் அடைந்தார்கள். உலகத்தில் முதன் முதலாகத் திரி சரணம் (மும்மணி) அடைந்த உபாசிகைகள் இவர்களே.

பிறகு அவர்கள் பகவருக்கும் யசபிக்குவுக்கும் உணவு அளித்தார்கள். உணவுகொண்ட பிறகு பகவர் அவர்களுக்கு மோதனா போதனை செய்து தமது விகாரைக்குத் திரும்பினார்.

நால்வர் துறவு

யசபுத்திரனுக்கு வாரணாசி நகரத்திலே நான்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் விமலன், சுபாகு, புண்ணியஜித்து, கவம்பதி என்னும் பெயரையுடையவர்கள். தமது நண்பனான யசகுமரன் துறவு பூண்டதைக் கேட்ட இந்த நண்பர்கள் இசி பதனத்திற்கு வந்து, யச அரகந்தரை வணங்கி ஒரு பக்கமாக அமர்ந்தார்கள். யசமுனிவர் அந்நான்கு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு புத்தரிடம் சென்றார். சென்று வணங்கி இவர்களை அறிமுகப்படுத்தி இவர்களுக்கு உபதேசம் செய்தருளும்படிப் பகவரை வேண்டினார்.

பகவன் புத்தர் இவர்களுக்குத் தானகாதை முதலானவைகளைப் படிப்படியாக உபதேசம் செய்தார். அப்போது இவர்களுக்குக் கிலேசங்கள் (மனமாசுகள்) நீங்கின. பின்னர் இவர்களுக்கு நான்கு வாய்மைகளை விரிவாக உபதேசம் செய்தார். அதைக்கேட்ட இவர்கள் ஸ்ரோதாபத்தி பலன் அடைந்து தங்களுக்குத் துறவு கொடுக்கும்படிக் கேட்டார்கள். பகவர் இவர்களை ஏஹிபிக்ஷதாவாக ஏற்றுக்கொண்டார். மீண்டும் பகவன் புத்தர் இவர்களுக்கு அறநெறியைப் போதித்தார். அது கேட்ட இந்தப் பிக்குகள் அரஹந்தரானார்கள்.

அப்போது உலகத்திலே இவர்கள் பதினொரு அர்ஹந்தர் தான் இருந்தார்கள்.

ஐம்பதின்மர் துறவு

யச அரஹந்தருடைய பழைய நண்பர்கள் ஐம்பதின்மர் வெவ்வேறு இடங்களில் வசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள், யசருடைய துறவைக் கேள்விப்பட்டு அவரிடம் வந்தார்கள். வந்து வணங்கி ஒரு பக்கமாக அமர்ந்தார்கள். யச அரஹந்தர் ஐம்பது நண்பர்களையும் வரவேற்று, அவர்களை அழைத்துக்கொண்டு பகவன் புத்தரிடம் சென்றார். பகவர் அவர்களுக்குத் தானகாதை முதலியவைகளை முறைப்படி உபதேசம் செய்தார். இதனாலே அவர்களின் உள்ளம்