உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

மூப்பு, மரணம், சோகம், துன்பம், விருப்பு, வெறுப்பு என்கிற தீயினாலே எல்லாப் பொருள்களும் தீப்பற்றி எரிகின்றன.

இந்த ஆதித்த பரியாய சூத்திரத்தை உபந்நியசிக்கக் கேட்ட பிக்குகள் அர்ஹந்தபலன் அடைந்தார்கள்.

பிறகு பகவன் புத்தர், முன்பு ஜடிலத்துறவிகளாக இருந்த ஆயிரக்கணக்கான சீடர்களோடு புறப்பட்டு முன்பு விம்பசார அரசனுக்குச் செய்த வாக்குறுதியை நிறைவேற்ற இராசகிருக நகரம் நோக்கிச் சென்றார். பன்னிரண்டு மைல் தூரமுள்ள வழியைக் கடந்து தால வனம் என்னும் பனஞ்சோலையை யடைந்து அங்கே ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே எழுந்தருளியிருந்தார்.

விம்பசாரன் பௌத்தனானது

பகவன் புத்தர் எழுந்தருளியிருக்கிறார் என்பதை அறிந்த சேணிய விம்பசாரன் என்னும் மகத நாட்டு அரசன், தன்னிடம் விருந்தாக வந்திருந்த லிச்சாவி அரசனான மஹாலியுடனும் வச்ச பாலன் முதலிய பன்னிரண்டு பிராமணர்களுடனும் மந்திரி பிர தானிகள் முதலிய பரிவாரங்களுடனும், வந்து பகவரை அடிபணிந்து தொழுதான். பிராமணர்களும் பகவன் புத்தரை வணங்கி ஒருபுறம் அமர்ந்தார்கள். பகவன் புத்தரையும் அவருடன் இருந்த ஜடிலத் துறவிகளையும் கண்ட பிராமணர்கள் ஐயங் கொண்ட னர். புத்தர் ஜடிலருடைய சீடரா அல்லது ஜடிலர்கள் புத்தருடைய சீடரா என்று அவர்களுக்கு ஐயம் உண்டாயிற்று. இதனைப் பகவன் புத்தர் உணர்ந்தார். அவர்களுடைய ஐயத்தை நீக்க எண்ணிப் பகவன் புத்தர் உருவேல் காசிபரைப் பார்த்துக் கூறினார்: “உருவேலரே! அனலை ஓம்பித் தீயை வளர்த்துத் தீ வணக்கம் செய்துகொண்டிருந்த நீர் ஏன் அந்த வணக்கத்தை விட்டு விட்டீர்?” இந்தக் கேள்விக்கு உருவேல காசிபர் இவ்வாறு விடை கூறினார். “அனலை ஓம்பித் தீயை வணங்கினால் அது மறுமையில் இந்திரலோகப் பதவியைத் தந்து இன்ப சுகங்களை அளிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த இன்பசுகங்கள் நிலையற்றவை. கடைசியில் துன்பத்தைத் தருபவை என்பதைத் தங்களால் அறிந்து, நிலையற்றதும் துன்பந்தருவதுமான இன்ப சுகங்களைத் தருகிற தீ வணக்கத்தைவிட்டு பௌத்த தர்மத்தைக் கொண்டேன்." இவ்வாறு கூறிய உருவேல காசிப் முனிவர் தமது ஆசனத்தைவிட்டு எழுந்துவந்து பகவன் புத்தரின் திருவடிகளில் தலைவைத்து வணங்கினார். அப்போது பகவன் புத்தர், இப்போது மட்டுமல்ல பூர்வஜன்மங்களிலுங்கூட உருவேல

66