உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9

என்னும் மும்மணியைச் சரணம் அடைந்து பௌத்தரானார். உலகத்திலே மும்மணிகளைச் சரணம் அடைந்த முதல் உபாசகன், யசகுல புத்திரனுடைய தந்தையான காசி நகரத்துத் தனபதியே

ஆவார்.

தன் தந்தைக்குப் பகவர் போதித்த தர்மோபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்த யசகுலபுத்திரன் ஞானம் பெற்று எல்லாக் கிலேசங் களையும் வென்று அர்ஹந்த நிலையையடைந்தார். அதாவது, இல்லறத்தைவிட்டுத் துறவுகொள்ளும் நிலையை யடைந்தார். அப்போது பகவர் யசகுல புத்திரனைத் தனபதி காணும்படிச் செய்தார்.

தன் மகனைக்கண்டு மகிழ்ச்சி யடைந்த தனபதி, மகனைப் பார்த்து “அருமை மகனே! உன்னுடைய தாயார் உன்னைக் காணாமல் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். நீ வந்தால் அவள் உயிர் பிழைப்பாள். உடனே வா" என்று அழைத்தார். யச புத்திரன் பகவன் புத்தருடைய முகத்தைப் பார்த்தான். அப்போது புத்தர், "யசபுத்திரன், அர்ஹந்த் நிலையை யடைந்திருக்கிறான். அவன் இனி இல்லறத்தில் தங்க மாட்டான்” என்று தனபதியிடம் கூறினார்.

அதுகேட்ட தனபதி, பகவன் புத்தரை யசபுத்திரனோடு அன்றைய தினம் தன் இல்லத்திற்குத் தானத்தின் பொருட்டு வரவேண்டும் என்று வேண்டினான். பகவன் புத்தர், தம்முடைய உடன்பாட்டை வாய்திறந்து சொல்வது வழக்கமில்லை. அவர் உடன்பாட்டுக்கு அறிகுறியாக வாளா இருந்தார். பிறகு யசபுத்தி ரன், பகவன் புத்தரிடம் ஏஹீபிக்ஷுதாவைப் பெற்று பிக்கு ஆனார்.

முதல் உபாசிகைகள்

பிறகு பகவன் புத்தர் யசபிக்குவுடன் தனபதியின் இல்லத்திற்குச் சென்றார். தனபதி அவர்களை வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்தார். அவ்வமயம் யசனுடைய தாயாரான சுஜாதை என்பவள் மருமகளுடன் (யசனுடைய மனைவியுடன்) வந்து பகவன் புத்தரை வணங்கி ஒரு பக்கமாக அமர்ந்தாள். அப்போது பகவன் புத்தர் அவர்களுக்குத் தானகாதை, சீலகாதை, சுவர்க்ககாதை முதலானவை களை முறையே உபதேசம் செய்தருளினார். அவ்வுபதேசங்களைக் கேட்டு அவர்கள் நன்றாக உணர்ந்தார்கள். பிறகு அவர்களுக்குப் புத்தர் நான்கு வாய்மைகளை அருளிச் செய்தார். அதைக்கேட்ட அவ்விருவரும் ஸ்ரோதாபத்தி நிலையையடைந்தார்கள். ஆகவே