உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

அவர் கூறும் காரணம் சிறப்பாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர் இன்னொரு குறிப்பிட்ட சமயம் சார்ந்த கதைகளைப் படிப்பதில்லை. இவ்வாறு சமயக்காழ்ப்புள்ள சூழலில் பல்வேறு சமயக்கதைகளையும் ஒரே தொகுப்பாகக் கொடுப்பதன்மூலம் எல்லோரும் வாசிப்பர். அந்த நோக்கத்தில்தான் இக்கதைகளைத் தொகுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இக்கதைகள் பெரும்பகுதி இந்தியச் சூழலில் நடைபெற்ற கதைகளே ஆகும். இக்கதைகளுக்குள் பேசப்படும் சமயம் தொடர்பான செய்திகளை வாசிப்பதன் மூலம் சமய நல்லிணக்கத்தைப் பெறமுடியும் என்று இவர் கருதியுள்ளார். சமயம் தொடர்பான விமர்சனக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த இவர் சமயக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருப்பதன் நோக்கத்தைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.

சென்னை - 96 ஏப்ரல் 2010

தங்கள் வீ. அரசு

தமிழ்ப்பேராசிரியர்

தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம்