உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பேருண்டியாளன் பிரசேனஜித்து

பிரசேனஜித்து என்பவர் கோசல நாட்டின் மன்னர். அரச போகங்களைக் குறைவில்லாமல் நிறையப் பெற்றிருந்தும் இவர் வாழ்க்கை இவருக்கே துன்பமாகவே இருந்தது. உடல் நலம் என்பது இவருக்குச் சிறிதளவும் கிடையாது. உடல்நலம் இல்லாமல் போகவே, மன நலமும் இல்லை. எப்போதும் சோம்பலும் உறக்கமுமாக இருப்பார். படுக்கையில் படுத்துப் புரண்டு கொண்டிருப்பார். மூக்குக்குமேல் முன்கோபம் வரும். எல்லோரிடத்திலும் சிடுசிடு என்று சீறிவிழுந்து கடுமையாகப் பேசுவார். எந்த வேலையிலும் மனம் செல்லுவதில்லை. அரச காரியங்களையும் கவனிப்பதில்லை. மயக்கமும் சோம்பலும் இவரைவிட்டு அகலவில்லை.

இதற்குக் காரணம் என்ன? பிரசேனஜித்து உணவுப் பிரியர். அறுசுவை உணவுகளை அளவுமீறி அதிகமாக உண்பார். மிதமாக உணவு கொள்ள அவர் பழகவில்லை. மீதூண் கொள்வதனாலே உடல்நலம் கெட்டு, அதனால் சோம்பலும் உறக்கமும் மயக்கமும் ஏற்பட்டு, வாழ்க்கையையே துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டார். உடம்பு அவருக்கு ஒரு பாரமாகத் தோன்றியது. “தீயள வின்றித் தெரியான் பெரிதுண்ணின் நோய்அள வின்றிப் படும் என்னும் பொன்மொழியை அவர் அறியவில்லை. மேலும், தாம் பேருண்டி கொள்வதுதான் தமது உடல் நோய்க்கும் உளநோய்க்கும் காரணம் என்பதை அவர் அறியவில்லை.

وو

இவ்வாறு உடல்நலத்தையும் மனநலத்தையும்கெடுத்துக் கொண்டு வாழ்நாளை வீண்நாளாக்கிக் கொண்ட பிரசேனஜித்து, ஒரு நாள் தம் மருகன் சுதர்சனன் என்பவரை அழைத்துக் கொண்டு, பகவன் புத்தர் தங்கியிருந்த விகாரைக்குச் சென்றார். சென்று பகவன் புத்தரை வணங்கினார். அப்போதும் அவருக்குச் சோம்பலும் மயக்கமும் உறக்கமும் மேலிட்டன. இவற்றைத் தடுத்துக்கொள்ள அவ்விடத்தில் உலாவினார். உலாவியும் மயக்கமும் உறக்கமும் மாறவில்லை. அவர் படுத்துக்கொள்ளவேண்டும் என்று பெரிதும் விரும்பினார். ஆனால், பெரியாராகிய பகவன் புத்தர் முன்னிலையில் அவ்வாறு செய்வது தவறு என்று கண்டு ஒரு புறமாக அமர்ந்தார். அரசருடைய