உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

33

தேடலானார். சிராவத்தி நகரம் முழுதும் தேடிப் பார்த்தார். மணமகள் கிடைக்கவில்லை. ஆகவே, பிராமணர் சிலரை அழைத்து, இப்படிப்பட்ட சிறப்புக்களையுடைய மணமகள், நல்ல குலத்தில் பிறந்தவள் எந்த நாட்டிலாயிலும் இருக்கிறாளா என்று தேடிப்பார்க்கும்படி அனுப்பினார். செலவுக்குப் போதிய பொருளைப் பெற்றுக் கொண்டு பிராமணர், பெண் தேடப் புறப்பட்டார்கள். நாடுகள் தோறும், நகரங்கள் தோறும் தேடிய பிறகு சகேத நகரத்தை யடைந்தார்கள்.

சகேத நகரத்திலே தனஞ்சயன் என்னும் செல்வச் சீமான் ஒருவர் இருந்தார். இவருக்கு அளவற்ற செல்வம் இருந்தது. இவருக்கு ஒரே மகள் இருந்தாள். விசாகை என்னும் பெயருடைய இவர் மகள் மிகுந்த அழகுள்ளவள். அதோடு புண்ணியவர்த்தன குமாரன் கூறிய ஐந்து அழகுகளும் வாய்க்கப்பெற்றவள். இவள் மணம் செய்வதற்கு உரிய வயதை யடைந்திருந்தாள். இவள் ஒரு நாள் மாலை வேளையில், பொழுது போக்குக்காக அந்நகரத்துப் பூஞ்சோலைக்குத் தன் தோழியர்களுடன் சென்றாள். அந்தச் சமயத்தில், மணமகளைத் தேடிச்சென்ற பிராமணர்கள், தற்செயலாக அந்தப் பூஞ்சோலைக்கு வந்தார்கள். வந்தவர்கள் விசாகையைப் பார்த்தார்கள். ஐந்து அழகும் பொருந்திய விசாகையைக் கண்டபோது தாங்கள் தேடிவந்த மணமகள் கிடைத்து விட்டாள் என்று மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் நகரத்தில் சென்று விசாகையின் குலம், சுற்றம்,செல்வம் முதலிய எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு நேரே சிராவத்தி நகரம் சென்று மிகாரப் பிரபுவினிடம், சகேத நகரத்து தனஞ்சயப் பிரபுவின் மகள் விசாகை எல்லா அழகும் வாய்க்கப் பெற்றிருப்பதைத் தெரிவித்தார்கள்.

தன்னைவிடச் சிறந்த பிரபுவின் வீட்டில், தகுந்த மணமகள் இருப்பதைக் கேட்ட அவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். உடனே விலை யுயர்ந்த பொருள்களைக் கையுறையாகக் கொடுத்துத் தகுந்த பெரியவர் களை அனுப்பித் தன் மகன் புண்ணியவர்த்தன குமாரனுக்குப் பெண் கேட்கும்படி அனுப்பினார். அவர்கள் சகேத நகரம் சென்று தனஞ்சயப் பிரபுவின் மாளிகையை அடைந்து மணம் பேசினார்கள். தனஞ்சயச் சீமான் தன் மகளைப் புண்ணிய வர்த்தன குமாரனுக்கு மணஞ்செய்து கொடுக்க ஒப்புக் கொண்டார்.

திருமணம், சகேத நகரத்திலே, மணமகள் மாளிகையிலே திருவிழாவைப்போல வெகு சிறப்பாக நடந்தது. தனஞ்சயச் சீமான், தன்