உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

ஒரு நாள் பிம்பிசார அரசர், கும்பகோசரை அழைத்துக் கொண்டு பகவன் புத்தரிடம் சென்றார். சென்று வணங்கிக் கும்ப கோசருடைய அடக்கமான தன்மையை அவரிடம் கூறினார். அதைக் கேட்ட பகவர் மகிழ்ந்தார். “ஊக்கத்தோடு நல்ல காரியங்களைச் செய்து கொண்டு நீதிநெறியில் நடந்து அடக்கமாக இருப்பவர், மக்கள் வாழவேண்டிய முறைப்படி வாழ்கிறவர் ஆவர்” என்று புத்தர் பெருமான் அருளிச்செய்தார்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல், அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து

என்பது தமிழ்மறை வாக்கு அன்றோ?