உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பிள்ளைத்தாய்ச்சி

ஜேதவனம் என்னும் இடத்திலே பகவன் புத்தர், வழக்கம் போல மாலை நேரத்திலே அறவுரைகளை விளக்கிக் கூறி விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருந்தார். நகரத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டுவந்து சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந் தார்கள். பகவன் புத்தருடைய செல்வாக்கு அதிகமா யிருந்தபடியினாலே நகரத்துச் செல்வர்களும் சீமான்களும் வந்து இக்கூட்டத்திலே அமர்ந்திருந்தார்கள். ஆண்கள் ஒரு புறம்; பெண்கள் ஒரு புறம் அமர்ந்திருந்தனர். புத்தருடைய சீடர்கள் இன்னொரு புறத்தில் அமர்ந் திருந்தார்கள். சொற்பொழிவு உச்சநிலையை அடைந்தது. கூட்டத்திலே எல்லோரும் தம்மை மறந்து பகவன் புத்தர் கூறுவதையே ஊன்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அமைதியான இந்தப் பெருங்கூட்டத்திலே புத்தர் பெருமானுடைய குரல் வெண்கல ஓசைபோலக் கணீர் என்று ஒலித்துக் கொண்டிருந்தது.

இந்த வேளையிலே சுமார் முப்பது வயதுள்ள ஒரு பெண்மணி இந்தக் கூட்டத்தில் வந்தாள். வந்து கூட்டத்தைக் கடந்து பகவன் புத்தர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலே சென்றாள். இவள் கண்ணையும் மனத்தையும் கவரத்தக்க நல்ல அழகு வாய்ந்தவள். நிறைந்த சூல் கொண்டவள்போல அவள் வயிறு பருத்திருந்தது. சந்நியாசிப் பெண்கள் உடுத்தும் புடைவையை உடுத்தியிருந்தாள். சிஞ்சா மாணவிகை என்னும் பெயருள்ள இந்தச் சந்நியாசினியை அவ்வூரார் நன்கறிவார்கள். பௌத்த மதத்திற்கு மாறுபட்ட வேறு மதத்தைச் சேர்ந்தவள் இவள். பகவன் புத்தரின் அருகிலே இவள் வந்து நின்றபோது, அங்கிருந்தவர், “இவள் ஏன் இங்கு வந்து நிற்கிறாள்! பகவர் கொள்கையை இவள் மறுத்துப் பேசப்போகிறாளா! சமய வாதம் செய்ய வந்திருக்கிறாளா?” என்று தமக்குள் எண்ணினார்கள். இவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிய எல்லோரும் ஆவலாக நோக்கினார்கள்.

அவள் புத்தரைப் பார்த்து இவ்வாறு சொன்னாள்: “பகவரே! விரிவுரையைச் சற்று நிறுத்துங்கள். நான் கேட்பதற்கு முதலில் விடை