உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

91

இவன். வாலிப வயதின் செவ்வி அவன் முகத்திலும் உடம்பிலும் காணப்படுகிறது. ஆழ்ந்த சிந்தனையோடு நடந்து வருகிறான். வனைச் சூழ்ந்து அரச சேவகர் விழிப்புடன் கண்காணித்துக் கொண்டு நடக்கிறார்கள்.

"ஐயோ, பாவம்! வாலிபன், சிறு வயது. இந்த வயதில் இவனுக்கு இந்தக் கதியா ஏற்படவேண்டும். இவன் தலைவிதி இது!” என்று இவனைக் கண்டவர் பலர் பேசிக்கொண்டார்கள்.

சேவகர் சூழ்ந்துவர, பேர்போன கள்ளன் தெரு வழியே வருவதைப் பத்திரையும் பார்த்தாள். ஆம், நன்றாய்ப் பார்த்தாள். அவன் அவளைப் பார்க்கவில்லை. அவனைக் கண்ட பத்திரையின் மனத்தில் ஏதோ உணர்ச்சி உண்டாயிற்று. தன் மாளிகையைக் கடந்து போகிற வரையில் அவனை நன்றாக உற்றுப் பார்த்தாள். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தாள். இந்தக் கட்டழகனைக் கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டாள். பிறகு 'ஓ' என்று அலறித் தரையில் விழுந்தாள்; மூர்ச்சையடைந்தாள்; தோழிகள் அவளைச் சூழ்ந்துகொண்டார்கள். தூக்கிக்கொண்டுபோய்ப் படுக்கையில் கிடத்தினார்கள். முகத்தில் குளிர்ந்த நீர் தெளித்து மெல்ல விசிறினார்கள். பத்திரை கண் திறந்து பார்த்தாள்.

"அவருக்குக் கொலைத் தண்டனையா? அதைத் தடுக்க முடியாதா?” என்று ஆவலோடு கேட்டாள்.

66

ஆமாம் கொலைத் தண்டனைதான். அரசன் கட்டளையை யார் தடுக்க முடியும்?”

"அவர் உயிர் இருந்தால் என் உயிரும் இருக்கும். அவர் உயிர் போனால் என் உயிரும் போய்விடும்” என்று கூறி, பிறகு "ஐயோ" என்று அலறினாள்.

இதற்குள், இச்செய்தி கேட்டு, பத்திரையின் தாயார் அவ்விடம் வந்தார். தோழியர் நடந்தவற்றை எல்லாம் சொன்னார்கள். தாய்க்குக் காரணம் விளங்கிவிட்டது. கன்னி வயதின் உணர்ச்சி இது என்பதை அறிந்தாள். பத்திரைக்கு ஏற்பட்டிருந்த மன அதிர்ச்சியைப் பலவித சிகிச்சைகளால் நீக்கினார்கள். அவள் எழுந்து உட்கார்ந்தாள். பத்திரைக்குத் திருமணம் செய்ய, தகுந்த இடத்தில் ஏற்பாடு செய்து வருவதாகவும் அவளுக்குச் சொன்னார்கள். பத்திரை வேறு ஒருவரை