உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

2. அரிசி அடை

107

சித்தார்த்தர் போதிஞானம் அடைந்து புத்தரான பிறகு அவருக்குப் பல சீடர்கள் இருந்தார்கள். அந்தச் சீடர்களான பிக்ஷுக் களுடன் பகவன் புத்தர் நாடுகளிலும் நகரங்களிலும் சென்று தமது பௌத்தக் கொள்கையை மக்களுக்குப் போதித்து வந்தார்.

ஒருசமயம் ராஜகிருக நகரத்துக்கு அருகிலே ஒரு ஆராமத்திலே பகவன் புத்தர் தமது சீடர்களான பிக்ஷுக்களுடன் தங்கியிருந்தார். அந்த நகரத்து அரசரும் செல்வர்களும் நிலக் கிழவர்களும் பகவன் புத்தரையும் அவருடைய சீடர்களையும் தமது வீடுகளுக்கு அழைத்து உணவு கொடுத்தார்கள். யாரும் அழைக்காத நாட்களில் புத்தரும் சீடர்களும் நகரத்தில் வீடுவீடாகச் சென்று பிச்சை ஏற்று உணவு கொள்வார்கள்.

அந்த நகரத்திலே பூரணை என்னும் பெயருள்ள ஓர் அம்மையார் இருந்தார். இந்த அம்மையாருக்கு உற்றார் உறவினர் இலர். ஏழையாகிய இவர் வீடுகளில் குற்றேவல் செய்து தன் வாழ்க்கையைக் கழித்துவந்தார். ஒரு நாள் பூரணைக்குக் கொஞ்சம் நொய் அரிசி கிடைத்தது. அதை மாவாக அரைத்து அடை சுட்டாள். அது வெல்லம், தேங்காய், எண்ணெய் சேராத வெறும் உப்பு அடை. அந்த அடையை அம்மையார் மடியில் வைத்துக் கொண்டு குடத்தை எடுத்துக் கொண்டு நீர் கொண்டுவர நகரத்துக்கு வெளியேயுள்ள ஆற்றுக்குச் சென்றார். ஆற்றங் கரையிலே மரத்தினடியில் உட்கார்ந்து அடையைத் தின்னலாம் என்று அம்மையார் எண்ணினார்.

பூரணை நகரத்துக்கு வெளியே சாலை வழியாகச் செல்லும் போது, புத்தர் எதிரிலே நகரத்தை நோக்கிப் பிச்சைக்காக வந்து கொண்டிருந்தார். பகவன் புத்தரைக் கண்டதும் பூரணைக்கு 'புத்த பகவருக்குப் பிச்சை கொடுக்க வேண்டும் என்று பல நாளாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவர் வரும் போது என்னிடம் ஒன்றும் இருப்பதில்லை. ஏதாவது உணவு இருக்கும்போது அவர் வருவது இல்லை. இப்போது என்னிடம் அரிசி அடை இருக்கிறது. புத்தரும் எதிரிலே வருகிறார். இன்றைக்கு இதை இவருக்குக் கொடுக்க வேண்டும்' என்ற எண்ணம் உண்டாயிற்று.

இவ்வாறு தனக்குள் எண்ணிக்கொண்ட பூரணை, நீர்க்குடத்தைத் தெருவின் ஓரத்தில் ஒருபுறமாக வைத்துவிட்டு அவரிடம் சென்று