உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

201

வாசுதேவன் அந்த யாழைக் கைதொழுது வாங்கினான். வாங்கி அதை இசை மீட்டினான். பிறகு பாடத் தொடங்கினான். அவனுடைய இசைப் பாட்டும் யாழிசையும் ஒத்திருந்தன. எவ்விதக் குற்றமும் இல்லாமல் அவன் இசை பாடினான். அந்த இசைப் பண் தேவகானம் போல இசைத்தது. மண்டபம் முழுவதும் இன்னிசை பரவிற்று அமைதியாக இருந்த மண்டபத்தில் அந்த இசை சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்ததுபோல இருந்தது. இசைக்கலையில் வல்லவளான காந்தருவதத்தை அந்தத் தேவகானத்தைக் கேட்டு மகிழ்ந்தாள். மன்னனும் மந்திரியும் இசைக் கலைஞரும் மகிழ்ச்சியடைந் தார்கள். இவ்வித இன்னிசையை இதுவரையில் கேட்டதில்லை என்று கூறிச் சபையோர் பெரு மகிழ்ச்சியடைந் தார்கள். இசை பாடி முடிந்தவுடன் மண்டபத்திலிருந்து மகிழ்ச்சி ஆரவாரம் வானளாவ ஒலித்தது. வாசுதேவ குமரன் இசையில் வென்றான்.

மணமாலை இருந்த தங்கத் தட்டைத் தோழிப் பெண் காந்தருவ தத்தையிடம் நீட்டினாள். அரசகுமாரி மண மாலையைக் கைகளால் எடுத்து வாசுதேவகுமாரனுடைய கழுத்தில் சூட்டினாள். திரைச்சீலை இறங்கிவந்து மேடையிலிருந் தவர்களை மறைத்துவிட்டது.

பிறகு, காந்தருவதத்தைக்கும் வாசுதேவ குமரனுக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது.