உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் /211 மேற்கொள்ளாமல், அரங்கம் ஏறி ஆடல் பாடல் செய்யாமல் குலமகளிர் கைம்மை வாழ்க்கையை உறுதியாகப் பிடித்தாள்.

மாதவி கணிகைத் தொழிலில் ஈடுபடாதபடியினாலே சித்திராபதி அவள்மேல் வெறுப்படைந்தாள். ஆனாலும் மாதவியின் மகளும் தன்னுடைய பேர்த்தியுமான பன்னிரண்டு வயதுள்ள மணிமேகலையைக் கணிகைத் தொழிலில் புகுத்த எண்ணினாள். மணிமேகலையை அரங்கேற்றித் தலைக்கோலிப் பட்டம் பெறச் செய்து அவளை நாடக நடனங்களைச் செய்து கணிகையர் தொழிலை மேற்கொள்ளும்படி செய்ய அவள் விரும்பினாள். சோழ மன்னனுடைய மகனான உதயகுமரனிடஞ் சென்று மணிமேகலையைக் காமக்கிழத்தியாக்கிக் கொள்ளும் படி அவனைத் தூண்டினாள்.

ஆனால், மாதவியோ தன் மகள் மணிமேகலையைக் கணிகை வாழ்க்கையில் புகுத்த விரும்பவில்லை. அவளைக் குலமகள் வாழ்க்கையில் புகுத்த விரும்பினாள். குலமகன் ஒருவனுக்கு அவளை மணஞ் செய்துவைக்க எண்ணினாள். ஆகவே, சித்திராபதியிடமிருந்து பிரிந்து வந்தால் அல்லாமல் தனக்கும் தன் மகள் மணிமேகலைக்கும் நல்வாழ்க்கை ஏற்படாதென்று மாதவி அறிந்தாள். அதன்படி சித்திரபதியிடமிருந்து பிரிந்து வாழ உறுதி கொண்டாள்.

அக்காலத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் சூழ்நிலை மாதவியின் கருத்துக்கு ஆதரவு காட்டவில்லை. சாதி அமைப்புகள் உருவாகிக் கொண்டிருந்த காலம் அது கணிகையர் குலத்தில் பிறந்தவர் கணிகை யாகவே இருக்கவேண்டும். அவர்கள் ஒருவனையே மணந்து குலமகள் போல் வாழக்கூடாது என்னும் தவறான கருத்து அக்காலத்துச் சமுதாயத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. அக்காலத்தில் இருந்த சைவம் வைணவம் வைதிகம் ஜைனம் என்னும் சமயங்களும் மாதவி யின் சீர்திருத்த வாழ்க்கைக்கு ஆதரவு காட்டவில்லை. வேசியர், கணிகையர் போன்ற விழுந்தவரைக் கைகொடுத்துத் தூக்கி உயர்த்தி, அவர்களுக்குச் செம்மையான வாழ்க்கையைத் தர அக்காலத்துச் சமூகமும் சமயங்களும் இடந்தரவில்லை.

அக்காலத்தில் மாதவிக்கு ஒரே ஒரு புகலிடம் மட்டும் இருந்தது. அந்தப் புகலிடந்தான் பௌத்த மதம். பௌத்த மதம் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டிலே, முக்கியமாகச் சோழ நாட்டிலே செல்வாக்குப்