உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

மின்னும் புகழ்க்கு நல்லானே! வீராகரனே! வியனுலகின் மன்னர் பரவும் மன்னவனே! மலயா நிலஞ்சேர் நாட்டரசே! முன்னை நெறி நூல் இயல் இசைகள் முழுதும் உணர்ந்த

என்னை ஒழிய இசை வல்லார் இல்லை உலகில்

229

(பெருமானே?

(எனவுரைத்தான் இதைக்கேட்ட பாண்டியன் தன்னுடைய இசைப் புலவனான பாண பத்திரனின் இசைப் புலமையையும் ஏமநாதனுடைய இசைப் புலமையையும் அறிய எண்ணினான்.

ஆகவே இவ்விரு இசைப் புலவர்களுக்கும் இசைப் போட்டி நடத்தக் கருதினான். ஏமநாதன் தங்குவதற்கு வீடு முதலியவை களை அமைத்துக்கொடுத்தான். அந்த இல்லத்தில் ஏமநாதன் தன்னுடைய

சீடர்களுடன் தங்கியிருந்தான்.

பிறகு, அரசன் தன்னுடைய இசைப் புலவனான பாணபத்திரனை அழைத்துச் சோழ நாட்டு இசைப் புலவன் ஏம நாதனுடன் இசை வாது செய்து அவனை வெல்ல முடியுமா என்று கேட்டான். பாணபத்திரன் அரசனை வணங்கி “அரசர் பெருமானே! அவ்வாறே செய்வேன்.

அஞ்சேன் அஞ்சேன் ஒருவர்க்கும் அஞ்சா திங்கு வந்தவனை மிஞ்ச அஞ்சும் படிபாடி வென்றே ஓட்டிவிடக் கடவேன்

99

என்று கூறினான். அரசன் இசைப் போட்டிக்கு நாள் குறித்து அந்த நாளில் இரண்டு இசைவாணர்களும் அரச சபைக்கு வந்து இசை பாட வேண்டும் என்று அறிவித்தான்.

இந்தச் செய்தி நகரமெங்கும் பரவிற்று. ஏமநாதனுக்கும் பாணபத்திரனுக்கும் இசைப் போட்டி நிகழப் போவதை அறிந்த போது மதுரை நகரத்து மக்கள் பரபரப்படைந்தார்கள். இசைப் போட்டி நடப்பதைக் காண அவர்கள் விரும்பினார்கள்.

இதற்கிடையில் ஏமநாதனுடைய சீடர்கள் நகரத்தில் சென்று கடை வீதியிலும் வேறு இடங்களிலும் இசை பாடித் தங்களுடைய இசைக் கலையின் சிறப்பை நகர மக்களுக்குப் புலப்படுத்தினார்கள்.

சுந்தர அணி அணிந்து தொகுமுடிச் சுற்றுஞ் சுற்றிச் சிந்துரப் பொட்டும் இட்டுச் சிறந்த குப்பாயம் இட்டுச் சந்தனம் இட்டு வீணை தண்டு யாழ் கையில் வாங்கி வந்த தந்திரி திருத்திப் பாடினார் மயங்க எங்கும்