உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்தக் கதைகள்

மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 1960 ஆம் ஆண்டில் எழுதிய நூல் புத்த ஜாதகக் கதைகள் ஆகும். தமிழகத்தில் பௌத்தத்தின் பல்வேறு போக்குகள் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் செய்த மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் புத்தர் கூறியதாக வழங்கப்படும் இக்கதைகளையும் தொகுத்துள்ளார்.

இக்கதைகளில் இறப்பு, வறுமை, துறவு, உபதேசம், நன்றியறிதல் பிக்குகளின் வாழ்க்கைமுறை, சோம்பேறித்தன்மை, சீடர்களின் தன்மை ஆகிய பல்வேறு தன்மைகள் குறித்துப் பேசுவதாக அமைந்துள்ளன. புத்தர் ஒருகுறிப்பிட்ட கருத்தை வெளிப்படுத்து வதற்கு இவ்வகையான கதைகளைக் கூறினார் என்பதை புத்த ஜாதகக் கதைகள் என்ற தொகுப்பின் மூலம் அறிகிறோம். ஜாதகக் கதைகள் என்பவை ஒரு வகைமையாகவே அமைந்துள்ளன. பல்வேறு மொழிகளில் பல்வேறு வேறுபாடுளுடன் இக்கதைகள் வழங்கப்படுவதைக் காண்கிறோம். மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் தமிழ்ச்சூழலுக்கு ஏற்றவகையில் இக்கதைகளைத் தொகுத்திருப்பதை அறிகிறோம். இதன்மூலம் பௌத்த சமயக் கருத்துகள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதைக் காணமுடிகிறது. பல்வேறு இடங்களில், பல்வேறு சூழல்களில், பல்வேறு பயணங்களில் புத்தர் இக்கதைகளைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.