உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

இச்சொற்களைப் பேசியவுடன், போதிசத்துவராகிய சாமன் நஞ்சுநீங்கி எழுந்து உட்கார்ந்தான். அவனுடைய உடம்பு பழையபடி அழகும் வலுவும் பெற்று விளங்கிற்று. அவனுடைய பெற்றோரும் கண் படலம் நீங்கிப் பார்வை பெற்றனர். அவ்வமயம் பொழுதும் விடிந்தது.

சாமன் உயிர்பெற்று எழுந்ததும், அவனுடைய பெற்றோர்கள் பார்வை பெற்றதும் ஆகிய இவை தெய்வ மகளின் அருளினால் நிகழ்ந்தன. தங்களுடைய மகன் உயிர்பெற்றுப் பிழைத்ததற்காகவும் தாங்கள் கண்பார்வை பெற்றதற்காகவும் அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார்கள்.

அப்போது சாமன் கூறினான்: “நான் உயிருடன் இருக் கிறேன். நீங்கள் வருந்தவேண்டாம். கண்ணைத் துடைத்துக் கொள்ளுங்கள். அரசர் பெருமானே! தாங்கள் எங்களுடைய மன்னன். தங்கள் கட்டளைப்படி செய்யக் காத்திருக்கிறோம். எங்கள் குடிலுக்கு எழுந்தருளி, கனியும் கிழங்கும் அருந்திப் பசியாறுங்கள்" என்று அரசனை வேண்டினான்.

இப்புதுமையைக் கண்டு அரசன் வியப்படைந்தான். “எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லாம் வியப்பாக இருக்கின்றன. நீ இறந்து போனதை நான் கண்ணால் கண்டேன். இப்போது உன்னை உயிருடன் காண்கிறேன். இது என்ன புதுமை?”

சாமன் கூறினான்: “அறத்தைக் கடைப்பிடித்து, பெற்றோ ருக்குத் துன்பம் வந்த காலத்தில் அவர்களைப் போற்றி ஊழியம் செய்கிறவர் களுக்குத் தெய்வம் மனம் இரங்கி அருள் செய்யும். பெற்றோரைப் பேணிப் போற்றுகிறவர்களுக்குத் தெய்வம் இம்மையிலும் மறுமை யிலும் அருள் செய்யும்.

அரசன் வியந்து கூறினான்: “சாம! நீயே என் குரு. நீயே எனக்கு ஆசிரியன். எனக்கு அறநெறியைப் புகட்ட வேண்டும்.

""

சாமன் சொன்னான்: “அரசர் பெருமானே! மக்கள் வாழ்க்கை அற நெறியை அடிப்படையாகக் கொண்டது. அறநெறி என்பது கடமை. கடமையை ஒழுங்காகச் செய்தால் இம்மை யிலும் மறுமையிலும் நன்மை பெறலாம். அறநெறி அல்லது கடமை என்பது யாது? பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்க. மனைவி மக்களைக் காப்பாற்றி அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்க. நண்பர்களிடத்திலும், அமைச்சர்களிடத்திலும், மற்றவர்களிடத்