உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

அமைச்சர்கள் மீண்டும் சபைகூடி யோசித்தார்கள். அரசன் இல்லாமல் அரசாட்சியை நடத்துவது முடியாது. யாரை அரச னாக ஏற்படுத்துவது? என்று சிந்தித்தனர். அப்போது அரசகுரு ஒரு யோசனை கூறினார். கொற்றத்தேரை ஊரில் அனுப்பி அரசாட்சிக் குரியவரை ஏற்றிக்கொண்டு வருபவரை அரசனாக்கலாம் என்பது அவர் சொன்ன யோசனை. இதை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே, அரசனுடைய தேரை அலங்காரம் செய்து, குதிரைகளைப் பூட்டி, தேரில் அரச சின்னங்களை அமைத்து நால்வகைச் சேனைகள் சூழ, வாத்தியங்கள் முழங்கத் தேரை அனுப்பினார்கள். குதிரைகள் தேரை இழுத்துச்சென்றன. அரண்மனையை வலமாகச் சுற்றிக்கொண்டு இராஜ வீதிகள் வழியாகத் தேர் சென்றது. இராஜ வீதிகளில் வசித்த சேனைத் தலைவர், அமைச்சர்கள் முதலியவர்கள், தேர் தங்கள் வீட்டருகில் நின்று தங்களை ஏற்றிக்கொண்டு போகும் என்று ஒவ்வொரு வரும் ஆவலாக இருந்தார்கள். தேர் எங்கும் நிற்கவில்லை. நகரத்தின் கிழக்கு வாயிலைக் கடந்து நகரத்துக்கப்பால் இருந்த மாந் தோப்பில் நுழைந்தது. எல்லோரும் தேரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். ஒரு பெரிய மாமரத்தின் அடியில் ஒரு பெரிய பாறை இருந்தது. தேர் அந்தப் பாறையின் அருகில் போய் நின்றது.

அந்தப் பாறையின்மேல் போதிசத்துவராகிய மகாஜனகன் படுத்துக் கொண்டிருந்தார். அவரைக்கண்ட அரசகுரு, இவன் அரசாட்சிக்குத் தகுதி உள்ளவன்தானா என்று அறிய எண்ணினார். இவன் அறிவுடைய வனாக இருந்தால் நம்மைக் கண்டு அஞ்சாமல் வாளா இருப்பான். அறிவற்ற மூடனாக இருந்தால் நம்மைக் கண்டு அஞ்சி நடுங்குவான் என்று எண்ணி அவர் வாத்தியங்களை முழங்கச் சொன்னார். வாத்தியங் கள் கடல் ஒலி போல ஒலித்தன. ஒலியைக் கேட்ட போதிசத்துவர் எழுந்து உட் கார்ந்து, கூட்டம் இருப்பதைப் பார்த்துவிட்டு, மறுபடியும் இடதுபுறமாகத் திரும்பித் துணியை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டார். அப்போது அரசகுரு, அவர் அருகில் போய், போர்வை யை விலக்கி அவருடைய உள்ளங்கால் இரேகைகளின் அடையா எத்தைப் பார்த்தார்.பிறகு, மறுபடியும் வாத்தியங்களை முழங்கும்படி சொன்னார். பெரிய ஓசையைக் கேட்ட போதி சத்துவர் மறுபடியும் எழுந்து உட்கார்ந்து பார்த்துவிட்டு, வலது புறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டார். அப்போதும் அரசகுரு அவருடைய பாதக் குறிகளைக் கண்டு, இவர் பெரிய அரசனாக இருக்கக்கூடியவர் என்று அறிந்தார்.