உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அகித்த ஜாதகம்

பகவன் புத்தர் ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது, சாவித்தி நகரத்தில் இருந்த ஒரு கொடையாளியைப் பற்றிக் இந்தக் கதையைக் கூறினார். இந்தக் கொடையாளி பகவன் புத்தரை ஏழுநாட்கள் தனது இல்லத்தில் அழைத்து அவருக்கும் அவருடன் சென்றவர் எல்லோருக்கும் தான தருமங்களைச் செய்தார். கடைசி நாள், பிக்ஷக்கள் எல்லோருக்கும் அவர்களுக்கு இன்றியமையாமல் வேண்டிய பொருள்களைத் தானம் செய்தான். அப்போது பகவர் அவனுக்கு நன்றி கூறினார். “சாவகரே! நீ செய்த ஈகை பெரியது. பெரிதும் கடினமான செயலை நீர் செய்தீர். தானங் கொடுப்பது பழைய காலத்து மக்களின் பழைய வழக்கம். உலகத்தில் இல்லறத்தில் வாழ்ந்தாலும், துறந்து துறவறத்தில் இருந்தாலும் தானம் கொடுக்கவேண்டும். முற்காலத்தில் இருந்த அறிஞர்கள், உலக வாழ்க்கையை வெறுத்துக் காட்டிலே சென்று இருந்த போதுங்கூட, உப்பும் மிளகும் இல்லாமல் வேகவைத்த காரை இலை உணவைத் தம்மை வந்து இரந்தவர்களுக்குக் கொடுத்துத் தாங்கள் பட்டினி கிடந்து மகிழ்ச்சி யோடு இருந்தார்கள்” என்று கூறினார். இதைக் கேட்ட அவர், "பகவரே! பிக்குகளுக்கு வேண்டிய பொருள்களைத் தானம் செய்வது என்பது தெளிவாக விளங்குகிறது. ஆனால், தாங்கள் சொல்லிய செய்தி விளங்க வில்லை” என்றார். அப்போது, பகவன் புத்தர் இவர் வேண்டுகோளின் படி பழைய கதையைச் சொன்னார்:

6

பிரமதத்த அரசன் வாரணாசி நாட்டை அரசாண்ட முன் னொரு காலத்தில் செல்வம் படைத்த ஒரு பிராமணக் குடும்பத் திலே போதி சத்துவர் பிறந்தார். அந்தக் குடும்பத்தின் செல்வம் எட்டுக் கோடிப் பொன் உடையது. அக் குடும்பத்தில் பிறந்த போதிசத்துவருக்கு அகித்தி என்று பெயர் சூட்டினார்கள். இக் குழந்தை வளர்ந்து நடக்கும் பருவம் அடைந்தபோது, இக் குழந் தைக்குத் தங்கையாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப் பெண் குழந்தைக்கு யசவதி என்று பெயர் சூட்டினார்கள். போதிசத்துவர் காசிக்குப் போய் பதினாறு வயதளவும் கற்கவேண்டிய கல்விகளை யெல்லாம் படித்துத் தேர்ந்து தன்